4, 6, 6, 6, 4.. ஒரே ஓவரில் 26 ரன்ஸ்.. கிறிஸ் கெயிலை முந்திய அபிஷேக் சர்மா.. ஐபிஎல் வரலாற்றில் மெகா சாதனை

Abishek vs Mukesh
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 18வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 45, ரகானே 35 ரன்கள் எடுத்த உதவியுடன் வெறும் 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்கம் 50 ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் வெற்றி பெற்ற ஹைதராபாத் 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன் காரணமாக சிஎஸ்கே சார்பில் அதிகபட்சமாக மொய்ன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்தும் 2வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

சரவெடி சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் கேப்டன் ருதுராஜ் 26 (21), ரச்சின் ரவீந்தரா 12 (9) என சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் திணறலாக பேட்டிங் செய்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதே பிட்ச்சில் 166 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய இளம் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 3 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்டார்.

குறிப்பாக காயமடைந்த பதிரனாவுக்கு பதிலாக இப்போட்டியில் ஒரு வருடம் கழித்து இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி களமிறங்கினார். ஆனால் அவர் வீசிய 2வது ஓவரில் 4, 0, 6, 0, 6 நோபால், 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அபிஷேக் சர்மா ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து போட்டியை தலைகீழாக மாற்றினார்.

- Advertisement -

அந்த வகையில் 308.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் முரட்டுத்தனமான அடித்து நொறுக்கிய அவர் 37 (12) ரன்கள் விளாசு சென்னையிடமிருந்து வெற்றியைப் பறித்ததால் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதை விட முகேஷ் சௌத்திரிக்கு எதிராக 26 ரன்கள் அடித்த அபிஷேக் ஷர்மா 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் 2வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தோனி மட்டும் கொஞ்சம் யோசிச்சிருந்தா நேத்து சி.எஸ்.கே அணி ஜெயிச்சிருக்கும் – அம்பத்தி ராயுடு கருத்து

மொத்தத்தில் அரை சதம் கூட அடிக்காமல் பெரிய இன்னிங்ஸ் விளையாடாமல் ஒரே ஓவரில் அதிரடியாக விளையாடி அவர் ஆட்டநாயகன் விருது வென்றது ரசிகர்களுக்கும் வியப்பாக அமைந்தது. அந்த சாதனை பட்டியல்:
1. அபிஷேக் ஷர்மா : 26, முகேஷ் சௌத்ரிக்கு எதிராக, 2024*
2. சுனில் நரேன் 24 வருண் சக்கரவர்த்திக்கு, எதிராக, 2019
3. கிறிஸ் கெயில் : 24, புவனேஸ்வர் குமாருக்கு எதிராக, 2015
4. கிறிஸ் கெயில் : 24, மன்ப்ரீட் கோனிக்கு எதிராக, 2012

Advertisement