தோனி மட்டும் கொஞ்சம் யோசிச்சிருந்தா நேத்து சி.எஸ்.கே அணி ஜெயிச்சிருக்கும் – அம்பத்தி ராயுடு கருத்து

Rayudu
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த 18-வது ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அந்த அணியிடம் தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது 2 ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற சென்னை அணியானது தற்போது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது சென்னை அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமே மோசமான பேட்டிங் தான் என்று பேசப்படுகிறது. ஏனெனில் ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 83 ரன்கள் குவித்து வலுவாக இருந்த வேளையில் போட்டியின் இரண்டாம் பாதியில் சென்னை அணியின் வீரர்களால் அதிரடியாக விளையாட முடியாமல் போனதால் ரன் குவிக்க முடியாமல் போனது.

அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி 5 ஓவர்களில் பவுண்டரிகளை அடிக்க போராடினர். அதோடு தோனியும் கடைசி 3 பந்துகள் இருக்கும் போதுதான் களத்திற்கு வந்து 1 ரன் மட்டுமே அடித்தார். இப்படி சென்னை அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் தோனி முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் என சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி இந்த போட்டியில் முன்கூட்டியே களத்திற்கு வந்திருக்க வேண்டும். ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் இந்த மைதானத்தில் பவுண்டரிகளை அடிக்க திணறிய வேளையில் 18-வது ஓவரிலேயே தோனி வந்து இருந்தால் தனது அனுபவத்தின் மூலம் நிச்சயம் அதிகமான பவுண்டரிகளை அடித்திருக்க முடியும் என்று ராயுடு கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்ரீகாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர்.

இதையும் படிங்க : தோனியை தடுக்கவே இப்படி செஞ்சீங்களா? அந்த இந்திய வீரர்னா சும்மா விட்ருப்பீங்களா.. கமின்ஸ்க்கு கைஃப் 2 கேள்வி

குறிப்பாக இந்த மைதானம் மெதுவாக இருந்ததால் மற்ற பேட்ஸ்ம்ங்கள் கஷ்டப்பட வேளையில் நிச்சயம் தோனி 18-வது ஓவரில் களத்திற்கு வந்திருந்தால் அவரால் அதனை கணித்து நன்றாக செயல்பட்டு இருக்க முடியும் என்றும் தோனி முன்கூட்டியே களமிறங்கி இருந்தால் நிச்சயம் சென்னை அணி 180 முதல் 185 ரன்கள் வரை குவித்திருக்கும். இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் அது போட்டியின் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று ஹர்பஜன் சிங்கும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement