தோனியை தடுக்கவே இப்படி செஞ்சீங்களா? அந்த இந்திய வீரர்னா சும்மா விட்ருப்பீங்களா.. கமின்ஸ்க்கு கைஃப் 2 கேள்வி

Mohammed Kaif 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 45, ரகானே 35 ரன்கள் எடுத்த உதவியுடன் 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அதிகபட்சமாக மொயின் அலி 2 விக்கெட்டுகள் எடுத்தும் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் சென்னை பின்னடைவை சந்தித்தது. முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஹைதராபாத் பவுலர்கள் ஸ்லோவான கட்டர் பந்துகளை வீசினர்.

- Advertisement -

கைப் கேள்வி:
அதில் துபேவை தவிர்த்து அனைத்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட முடியாமல் திண்டாட்டினார்கள். அந்த வகையில் டெத் ஓவரில் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 19வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய 4வது பந்தை எதிர்கொண்டு நேராக அடித்தார். அது நேராக புவனேஸ்வர் குமார் கைகளுக்கு சென்றது. அதை எடுத்த புவனேஸ்வர் குமார் ஸ்டம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

மறுபுறம் அவுட்டாவாதிலிருந்து தப்பிப்பதற்காக ரவீந்திர ஜடேஜா குறுக்கே வந்ததால் பந்து அவர் மீது பட்டது. அதன் காரணமாக “ஃபீல்ட் அப்ஸ்ட்ரக்சன்” விதிமுறைப்படி தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு ஹைதராபாத் விக்கெட் கீப்பர் ஹென்றிச் க்ளாஸென் கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட களத்தில் இருந்த நடுவர்கள் நிலைமையை சோதிப்பதற்காக 3வது நடுவரின் உதவியை நாடினார்கள். ஆனால் அப்போது தலையிட்ட ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸ் அந்த முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

அதனால் மேற்கொண்டு நடுவர்கள் எதுவும் செய்யாததால் ஜடேஜா தொடர்ந்து விளையாடி 31* (23) ரன்கள் மட்டும் எடுத்தார். இந்நிலையில் ஜடேஜா அவுட்டானால் அடுத்ததாக தோனி வந்து அதிரடியாக ரன்கள் குவிப்பார் என்பதால் அதை தடுப்பதற்காகவே முடிவை வாபஸ் பெற்றீர்களா? என்று பட் கமின்ஸ்க்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: பலம்வாய்ந்த சி.எஸ்.கே அணியை வீழ்த்தி பெற்ற வெற்றிக்கு பின்னர் தோனி குறித்து பேசிய கம்மின்ஸ் – விவரம் இதோ

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஃபீல்டை தடுத்ததற்காக ஜடேஜாவுக்கு எதிராக அப்பீல் செய்யாததற்காக பட் கமின்ஸிடம் 2 கேள்வியை வைக்கிறேன். அது தடுமாறும் ஜடேஜாவை களத்திலேயே வைத்து அதிரடியாக விளையாடக்கூடிய தோனியை பெவிலியனிலேயே வைத்திருப்பதற்கான தந்திரமான அழைப்பா? டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி இருந்திருந்தால் இதையே நீங்கள் செய்திருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement