பலம்வாய்ந்த சி.எஸ்.கே அணியை வீழ்த்தி பெற்ற வெற்றிக்கு பின்னர் தோனி குறித்து பேசிய கம்மின்ஸ் – விவரம் இதோ

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த சென்னை அணியை மிகச் சிறப்பாக கையாண்ட சன் ரைசர்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்களையும், ரகானே 35 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 18.1 ஒவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக மார்க்ரம் 50 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த மைதானம் ஆட்டம் செல்ல செல்ல மெதுவாக இருந்தது. சிவம் துபே ஸ் பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

அதனால் அவருக்கு எதிராக நாங்கள் ஸ்லோ கட்டர்களை வீச விரும்பினோம். அந்த வகையில் அவரையும் வீழ்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினோம். முதலில் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகளை பெறுவது தான் முக்கியம். அந்த வகையில் சென்னை அணியை வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலர்கள் பந்தவீச விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறவுள்ள நட்சத்திர வீரர்.. வெளியான தகவல் – விவரம் இதோ

இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மஹேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் போது கேட்ட சத்தம் போன்று ஒரு வீரருக்கு வரும் வரவேற்பு சத்தத்தை நான் கேட்டதே கிடையாது என்று தோனி குறித்தும் கம்மின்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement