எனது வாழ்க்கை பயணம் திரைப்படமானால் அவர்தான் ஹீரோவா நடிக்கணும் – யுவ்ராஜ் சிங் விருப்பம்

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் இடதுகை அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் கடந்த 2000-ஆம் ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2017-ஆம் ஆண்டு வரை 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 132 ஆட்டங்களில் அவர் விளையாடி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆல்ரவுண்டராக திகழ்ந்த யுவராஜ் சிங்கின் பங்களிப்பு என்பது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில் இன்றளவும் பல சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக யுவராஜ் சிங் பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிலரது வாழ்க்கை பயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே கபில் தேவ், தோனி, சச்சின் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி இருந்த வேளையில் தற்போது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை பயணம் குறித்த விடயமும் திரைப்படமாக உருவெடுக்க உள்ளது.

இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் எந்த நடிகர் நடித்தால் சரியாக இருக்கும்? என்று என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த யுவ்ராஜ் சிங் கூறுகையில் : தற்போது உள்ள நடிகர்களில் என் வேடத்தில் நடிப்பதற்கு ரன்பீர் சிங் பொருத்தமாக இருப்பார்.

- Advertisement -

ஏனெனில் அவர் சமீபத்தில் நடித்த அனிமல் திரைப்படத்தில் கூட அவரது நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். ஆனாலும் அந்த முடிவு என் கையில் இல்லை. இயக்குனரின் முடிவைப் பொறுத்ததுதான். என்னுடைய வாழ்க்கை பயணமானது திரைப்படமாக மாறும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் நல்ல செய்தியை அளிப்பேன் என்று யுவ்ராஜ் சிங் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் – விவரம் இதோ

கிரிக்கெட் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் பல்வேறு போராட்டங்களை சந்தித்த யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமானால் நிச்சயம் அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement