ஐ.சி.சி டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் – விவரம் இதோ

Axar-and-Jaiswal
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு இடையில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரானது நடைபெற்று வரும் வேளையில் டி20 கிரிக்கெட்டிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இன்றளவும் சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் தொடர்கிறார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்த டாப் 10-ல் மற்றொரு வீரராக இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது தனது வாழ்நாளில் சிறந்த தரநிலையான ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இந்த டாப் 10-ல் மற்றொரு வீரராக ஒன்பதாவது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். இதை தவிர்த்து டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதல் நான்கு இடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி அதே வீரர்கள் தொடர்கின்றனர்.

- Advertisement -

ஆனால் ஐந்தாவது இடத்தில் இருந்த சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாயை தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது பந்துவீச்சில் கலக்கிய அக்சர் பட்டேல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதையும் படிங்க : 22/4 என விழுந்த இந்தியா.. ரிங்குவுடன் சேர்ந்து 190 ரன்ஸ் விளாசி தூக்கி நிறுத்தி ஆப்கனை ஓடவிட்ட ஹிட்மேன்

எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement