2011இல் சச்சின் எங்கள ஹெட்போன் போட்டுக்க சொன்னாரு.. 2023 உ.கோ வெல்ல இந்திய அணிக்கு – முக்கிய ஆலோசனை கொடுத்த யுவி

Yuvraj Singh 2
- Advertisement -

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் விளையாட உள்ளது.

மேலும் வெளிநாடுகளில் அவ்வப்போது தடுமாறினாலும் சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய இந்திய அணி 2023 ஆசிய கோப்பையை வென்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. அத்துடன் பும்ரா, ராகுல் போன்ற காயத்தை சந்தித்த வீரர்கள் குணமடைந்து நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் விராட் கோலி, கில், கேப்டன் ரோகித் சர்மா போன்ற பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

- Advertisement -

யுவியின் அட்வைஸ்:
அதன் காரணமாக இம்முறை நிச்சயமாக சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் வலுவாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையை வெல்ல களத்தில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைத் தாண்டி வெளியில் பேசுபவர்களின் வார்த்தைகளுக்கு கவனத்தைக் கொடுக்காமல் வேண்டுமென இந்திய அணிக்கு யுவராஜ் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் வெளியில் செல்லும் போது யாருடைய விமர்சன பேச்சையும் கேட்கக்கூடாது என்பதற்காக காதில் ஹெட்போன் போட்டுக்கொள்ளுமாறு சச்சின் தங்களை அறிவுறுத்தியதாக யுவராஜ் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை ஆட்டத்தில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து சமூக வலைதளங்கள் உட்பட மற்ற எதற்கும் காது கொடுக்காதீர்கள் என்று இந்திய அணிக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது கவனச்சிதறல் அதிகமாக உள்ளது. ஏனெனில் அந்த நேரத்தில் (2011) சமூக ஊடகங்கள் பெரிதாக இல்லை. இருப்பினும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களால் இடையூறு ஏற்பட்டது. எனவே நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த முயற்சித்தோம். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியில் தோல்வியை சந்தித்ததால் ஊடகங்களில் வெறித்தனமான விமர்சனங்கள் வந்தன”

இதையும் படிங்க:6 அடி 9 அங்குலம்.. இந்திய வீரரை நெட் பவுலராக பயன்படுத்திய பாகிஸ்தான் அணி – யார் இவர்? அப்படி என்ன ஸ்பெஷல்?

“அப்போது சச்சின் எங்களிடம் “தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த வேண்டும். செய்தித்தாள் வாசிப்பதையும் தவிர்க்க வேண்டும். விமான நிலையங்களில் கூட்ட நெரிசலில் செல்லும் போது காதுகளில் ஹெட்போனை பயன்படுத்தி உலகக்கோப்பையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார். நாங்களும் அதை ஒப்புக்கொண்டு பின்பற்ற துவங்கினோம். இறுதியில் உண்மையாகவே அது வேலை செய்து வெற்றியில் பங்காற்றியது” என்று கூறினார்.

Advertisement