6 அடி 9 அங்குலம்.. இந்திய வீரரை நெட் பவுலராக பயன்படுத்திய பாகிஸ்தான் அணி – யார் இவர்? அப்படி என்ன ஸ்பெஷல்?

Nishanth-Saranu
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றோடு தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து துபாய் சென்றடைந்து அங்கிருந்து விமானம் மூலம் புதன்கிழமை மாலை ஹைதராபாத் வந்தடைந்தனர்.

அப்படி இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த வகையில் இன்று செப்டம்பர் 29-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும், அக்டோபர் 3-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் பாகிஸ்தான் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து உலகக்கோப்பை தொடரின் பங்கேற்கும் அந்த அணி அக்டோபர் 6-ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், அக்டோபர் 10-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராகவும், அக்டோபர் 14-ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத் வந்தடைந்த பாகிஸ்தான் வீரர்களின் வலைப்பயிற்சி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அந்த வலைப்பயிற்சியில் ஹைதராபாத்தை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் நிஷாந்த் சரனு என்பவர் பாகிஸ்தான் அணிக்கு நெட் பவுலராக பந்து வீசியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் யார் இந்த நிஷாந்த் சரனு? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் அவர் குறித்த விவரங்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி 19 வயதான நிஷாந்த் சரனு ஏற்கனவே அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி வருபவர். பாகிஸ்தான் அணிக்கு பல்வேறு நெட் பவுலர்கள் இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் தான் அவரை தேர்வு செய்து பந்து வீசவைத்துள்ளார். ஏனெனில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் பவுலர்கள் அனைவரும் 140-150 கிலோ மீட்டர் என அதிவேக பந்துவீச்சாளர்கள். எனவே 125-130 கி.மீ வேகத்தில் பந்துவீசும் 6 அடி 9 அங்குலம் உயரம் உள்ள இவரை பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக பந்துவீச கொண்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை 2023 : தொடர்நாயகன் விருதினை வெல்லப்போவது இந்த 2 பேர்ல ஒருத்தர் தான் – தினேஷ் கார்த்திக் கருத்து

அதோடு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காகவும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் மோர்னே மோர்கல் ஐபிஎல் தொடருக்கும் நெட் பவுலராக வந்து பந்துவீசும் படி கேட்டுக் கொண்டதாக நிஷாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது நான் 125-130 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி வருகிறேன். மோர்கல் என்னை இன்னும் சற்று வேகத்தை அதிகரிக்கும்படி கேட்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் போதும் லக்னோ அணிக்காகவும் நெட் பவுலராக வரும்படி அழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement