என்னப்பா உங்க டீம் 97க்கு ஆல் அவுட்டாகிடுச்சு ! ரெய்னாவை கலாய்த்த யுவி – அவரின் பதில் இதோ

Yuvraj Singh Trolls MS DHoni CSK Suresh raina
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணி என சாதனை படைத்ததுடன் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருடம் ஆரம்பம் முதல் எதுவுமே சரியாக அமையவில்லை. முதலில் 14 கோடிக்கு வாங்கிய தீபக் சஹர் விலகிய நிலையில் தேவையின்றி தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி பதவி விலகி அப்பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்தபோதே சென்னையின் ப்ளே ஆப் கனவு பாதி பறிபோனது.

CSK Ms DHoni

- Advertisement -

அதைவிட ஆல்-ரவுண்டராக அசத்தி வந்த ரவிந்திர ஜடேஜா கேப்டன்சிப் அழுத்தத்தால் பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் தடுமாறியதால் மீண்டும் அந்த பதவியே வேண்டாம் என்று தோனியிடம் வழங்கினார். அந்த நிலைமையில் கேப்டனாக தோனி திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளைப் பதிவு செய்த சென்னை கடைசி 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 3% சதவீத வாய்ப்பில் இருந்தது.

97க்கு ஆல் அவுட்:
அந்த நிலைமையில் மும்பைக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் களமிறங்கிய சென்னை அந்த அணியின் அதிரடியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 97 ஆல் அவுட்டானது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதல் ஒருசில ஓவர்களில் பவர்கட் என்பதால் டேவோன் கான்வே, ராபின் உத்தப்பா ஆகியோர் அநீதியாக அவுட்டாகி சென்ற நிலையில் மொய்ன் அலி, ராயுடு, ஷிவம் துபே போன்ற முக்கிய வீரர்களும் மும்பையின் மிரட்டலான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

MI vs CSK

அதனால் 50 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் மானத்தை நல்லவேளையாக கேப்டன் தோனி 36* (33) ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார். அதை தொடர்ந்து 98 என்றால் சுலபமான இலக்கை துரத்திய மும்பையை சென்னை பவுலர்கள் எளிதாக வெற்றி பெற விடாத போதிலும் 14.5 ஓவரில் 103/5 ரன்களை எடுத்த மும்பை 12 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதலடைந்தது. ஆனால் இந்த மோசமான தோல்வியால் 12 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த சென்னை 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

கலாய்த்த யுவி:
அதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்ட சென்னை முக்கிய போட்டியில் 97 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதால் பெரிய கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் இதை முன்னாள் சென்னை வீரர் ரெய்னாவுடன் இணைந்து பார்த்த முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அவரை சரமாரியாக கலாய்த்தார். அதை வீடியோ எடுத்த அவர் அதில் “ரெய்னா, இன்று உங்களின் டீம் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விட்டது. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியதுடன் கலகலவென சிரித்தார்.

“நான் அந்த போட்டியிலேயே இல்லை” என அதற்கு லேசான புன்னகையுடன் சுரேஷ் ரெய்னா பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையில் தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை பந்தாடி பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சுரேஷ் ரெய்னா அந்த அணி இதுவரை வென்றுள்ள 4 கோப்பைகளில் முக்கிய பங்காற்றியவர்.

- Advertisement -

சின்னத்தல ரெய்னா:
மேலும் சென்னைக்காக அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் உட்பட பல சாதனைகளைப் படைத்த அவரை கிரிக்கெட் வல்லுனர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்று பாராட்டிய நிலையில் சென்னை ரசிகர்கள் அவரை சின்னத்தல என்று கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 400க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி வந்த அவர் கடந்த சில வருடங்களாக ரன்கள் அடிக்க தவறியதுடன் சுமாரான பார்மில் இருந்தார். அதன் காரணத்தால் அவரை தக்க வைக்காத அந்த அணி நிர்வாகம் சமீபத்திய ஏலத்தில் வாங்காமல் கழற்றி விட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

raina

காலம்காலமாக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வந்த அவரை குறைந்தது பெஞ்சிலாவது அவரை வைத்திருக்கலாமே, மாறாக இப்படி நன்றியை மறந்து நடப்பது கொஞ்சமும் சரியில்லை என்று சென்னை அணி நிர்வாகத்தை இப்போதும்கூட பல சென்னை ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் நிதர்சனத்தை புரிந்து கொண்ட அவர் தற்போது அதே ஐபிஎல் தொடரில் மீண்டும் வர்ணனையாளர் அவதாரத்தில் பணியாற்றிவருகிறார்.

இதையும் படிங்க : பெங்களூரு அணிக்கு தங்களது உண்மையான வெயிட்டை காட்டிய பஞ்சாப் – அசத்தல் வெற்றி (நடந்தது என்ன?)

அப்படிப்பட்ட நிலையில் சென்னை 97 ரன்களுக்கு அவுட்டான போது “அந்த போட்டியில் நான் இருந்திருந்தால் இந்த மோசமான நிலைமைக்கு விட்டிருக்க மாட்டேன்” என்பது போல் யுவராஜ் சிங் கலாய்த்தற்கு ரெய்னா பதிலளித்துள்ளது சென்னை ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டுள்ளது.

Advertisement