99 ரன்னில் இதை செஞ்சதை ஜீரணிக்க முடியல.. தனது சிஷ்யன் அபிஷேக்கிற்கு யுவ்ராஜ் ஸ்பெஷல் பாராட்டு

Yuvraj Singh
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 27வது போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஏப்ரல் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 246 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் தங்களுடைய சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை சரமாரியாக அடித்து நொறுக்கி 18.3 ஓவரிலேயே 247/2 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதனால் ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து ஹைதராபாத் சாதனை படைத்தது. அந்த அணிக்கு அபிஷேக் ஷர்மா மிரட்டலான சதத்தை அடித்து 141, டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் விளாசி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

யுவ்ராஜ் பாராட்டு:

மறுபுறம் பஞ்சாப் கடினமாக போராடியும் வெற்றியை கோட்டை விட்டது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை சென்னைக்கு கொடுத்த ஹைதராபாத் 9வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தமக்குப் பின்னே இருந்து தொடர்ந்து ஆதரவும் ஆலோசனைகளும் வழங்கி வரும் தம்முடைய குரு யுவ்ராஜ் சிங்கிற்கு போட்டியின் முடிவில் அபிஷேக் ஷர்மா நன்றி தெரிவித்தார். முன்னதாக அந்தப் போட்டியில் 98 ரன்னில் இருந்த போது 2 சிங்கிள் எடுத்து அபிஷேக் ஷர்மா தனது சதத்தை தொட்டார். இந்நிலையில் 98 ரன்னில் இருந்த போது இவ்வளவு கடினமாக உழைத்து பெற்ற சதத்தை அவுட்டாகி வீணடிக்காமல் சிங்கிள் எடுத்து தொட்ட அபிஷேக் ஷர்மாவின் முதிர்ச்சித் தன்மையை ஜீரணிக்க முடியவில்லை என்று யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

யுவ்ராஜ் பாராட்டு:

இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வாஹ் சர்மா ஜீ’யின் மகனே. 98இல் இருந்த போது சிங்கிள் 99இல் இருந்த போது மீண்டும் சிங்கிள். இப்படிப்பட்ட முதிர்ச்சி தன்மையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினீர்கள் அபிஷேக் ஷர்மா. டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மாவா ஓப்பனிங் ஜோடியை பார்ப்பது விருந்தாக இருக்கிறது”

இதையும் படிங்க: இந்திய வீரராகவும், முதல் சன் ரைசர்ஸ் வீரராகவும் இரட்டை சாதனையை நிகழ்த்திய அபிஷேக் சர்மா – விவரம் இதோ

“இந்தப் போட்டியில் இரு அணிகளுமே நன்றாக விளையாடினார்கள். ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடியதைப் பார்த்தது நன்றாக இருந்தது” என்று கூறினார். அந்த வகையில் தம்முடைய சிஷ்யன் அபிஷேக் ஷர்மா இம்முறை சதத்தை தவற விடாமல் அடித்ததற்காக யுவ்ராஜ் தெரிவித்துள்ள பாராட்டு வைரலாகி வருகிறது.

Advertisement