பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கினை வெறும் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 247 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை :
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணியானது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேசிங்கை வெற்றிகரமாக பதிவு செய்து அசத்தியது. இந்த தொடரின் ஆரம்பத்தில் 5 போட்டிகளில் விளையாடியிருந்த சன்ரைசர்ஸ் அணி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருந்தது.
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் தற்போது 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சினை அடித்து நொறுக்கி 20 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது.
பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கினை நோக்கி இன்னிங்சை துவங்கிய சன்ரைசஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 141 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.
இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளையும் இந்த ஒரே இன்னிங்ஸின் மூலம் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய வீரராக ஐபிஎல் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் ஷர்மா இந்த 141 ரன்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : இந்த ரெசிபியை மாத்த விரும்பல.. 245 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றது குறித்து பேசிய – பேட் கம்மின்ஸ்
அதுமட்டும் இன்றி முதல் சன்ரைசஸ் வீரராகவும் அவர் ஒரு பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : இதுவரை சன்ரைசர்ஸ் அணி சார்பாக எந்த ஒரு வீரரும் ஒரே ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை அடித்தது கிடையாது. ஆனால் நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா அடித்த 10 சிக்ஸர்களின் மூலம் அந்த சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



