சிவம் துபேவை 2024 டி20 உ.கோ இந்திய அணியில் செலக்ட் பண்ணுங்க.. காரணம் இது தான்.. யுவ்ராஜ் கோரிக்கை

Yuvraj SIngh 2
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியை சந்தித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.

அதை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் மொயின் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் சென்னை 2வது தோல்வியை பதிவு செய்தது. அந்த வகையில் ஏமாற்றத் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்போட்டியில் சிவம் துபே மட்டுமே ஆறுதலாக அமைந்தார்.

- Advertisement -

யுவராஜ் கோரிக்கை:
ஏனெனில் ஆரம்பம் முதலே ஹைதராபாத் பவுலர்கள் ஸ்லோவான பந்துகளை வீசி சவாலை கொடுத்தனர். அதை சமாளிக்க முடியாமல் கேப்டன் ருதுராஜ் 26 (21), ரச்சின் 12 (9), ரகானே 35 (30), ஜடேஜா 31* (23), மிட்சேல் 13 (11) என அனைத்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் தடுமாற்றமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு மத்தியில் 4வது இடத்தில் களமிறங்கிய சிவம் துபே வேறு ஏதோ அணிக்கு எதிராக வித்யாசமான பிட்ச்சில் விளையாடுவது போல தம்முடைய ஸ்டைலில் 2 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்டார். அந்த வகையில் அவர் மட்டும் 187.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 45 (24) ரன்கள் அடிக்காமல் போயிருந்தால் சென்னை 150 ரன்கள் கூட தாண்டியிருக்காது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் துபே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் வெற்றியை இந்தியாவின் பக்கம் மாற்றிக்கொண்டு வரும் திறனை துபே கொண்டிருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஃபீல்டிங்கை எளிதாகக் கடந்து விளையாடும் சிவம் துபே பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் உலகக் கோப்பை அணியில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கேம் சேஞ்சராக இருப்பதற்கு தேவையான அனைத்து திறனும் அவரிடம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிட்ச்ல பிரச்சனை இல்ல.. 6 ஓவரில் செஞ்ச அந்த 4 தப்பு தான் தோல்விக்கு காரணம்.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வருத்தம்

அவர் கூறுவது போல ஆர்சிபி போன்ற மற்ற அணிகளில் தடுமாறிய துபே கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் 35 சிக்ஸருடன் 418 ரன்கள் விளாசி 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்த அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் சிக்ஸர் துபே ரசிகர்களால் பாராட்டப்படும் அவரை தற்போது யுவராஜ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement