92/0 டூ 117/6.. குஜராத்திடம் சொதப்பலான மாஸ் காட்டிய ஆர்சிபி.. பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

RCb vs Gt.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நான்காம் தேதி பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு 52வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து குஜராத் பேட்டிங் செய்தது.

ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே ரிதிமான் சகாவை 1 ரன்னில் காலி செய்த முகமது சிராஜ் கேப்டன் சுப்மன் கில்லையும் 2 ரன்களில் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 6 ரன்னில் கேமரூன் கிரீன் வேகத்தில் அவுட்டானதால் 19/3 என ஆரம்பத்திலேயே குஜராத் திணறியது. இருப்பினும் அப்போது தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

சொதப்பலான வெற்றி:
அந்த வகையில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் டேவிட் மில்லர் 30 (20) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய சாருக்கான் 37 (24) ரன்களில் விராட் கோலியின் அபாரமான ரன் அவுட்டால் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ராகுல் திவாட்டியா 35 (21) ரன்கள் எடுத்தும் 19.3 ஓவரில் குஜராத் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள், முகமது சிராஜ், விஜயகுமார் கலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 148 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் – விராட் கோலி ஆகியோர் சரமாரியாக அடித்து நொறுக்கி 6 ஓவரிலேயே 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதில் 18 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட டு பிளேஸிஸ் 64 (23) ரன்கள் விளாசி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் 1, ரஜத் படிடார் 2, கிளன் மேக்ஸ்வெல் 4, கேமரூன் க்ரீன் 1 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய சொதப்பலை அரங்கேற்றினர். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடி காட்டிய விராட் கோலியும் 42 (27) ரன்னில் அவுட்டானதால் பெங்களூரு வெற்றி கேள்விக்குறியானது.

இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததன் காரணமாக அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 21*, ஸ்வப்னில் சிங் 15* ரன்கள் எடுத்ததால் ஓவரிலேயே பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஜோஸ்வா லிட்டில் 4, நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் 92/0 என்ற துவக்கத்தை பெற்ற பெங்களூரு பின்னர் 117/6 என தடுமாறி கடைசியில் வென்று தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ அணியில் சுமாரான பாண்டியாவுக்கு பதில் ரிங்குவை செலக்ட் பண்ணுங்க.. முன்னாள் பாக் வீரர்

அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை மும்பைக்கு பார்சல் கட்டிய பெங்களூரு 7வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் செல்வதற்கான 50% கடினமான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் 7வது தோல்வியை பதிவு செய்த குஜராத் 9வது இடத்திற்கு சரிந்தது. மேலும் இதையும் சேர்த்து (42) ஐபிஎல் வரலாற்றில் வெற்றி பெற்ற போட்டிகளில் 4000 ரன்கள் அடித்த முதல் வீரராக விராட் கோலி அபார சாதனை படைத்தார்.

Advertisement