15 வருஷமா நீங்க என்ன பண்ணீங்களோ அதையே திருப்பி பண்ணுங்க – கோலிக்கு அட்வைஸ் கொடுத்த யுவ்ராஜ்

Yuvi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த பல வீரர்கள் தங்களது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது அணியில் இருக்கும் வீரர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே வேளையில் மீண்டும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதிலும் பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி இந்த ஐபிஎல் தொடரில் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவதால் நிச்சயம் தனது பழைய ஃபார்மில் திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அற்புதமான செயல்பாட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை நடைபெற்றுள்ள 9 போட்டிகளில் அவர் 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி இருமுறை தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்ததால் அவரது பேட்டிங் பார்ம் மிக மோசமாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Kohli

இந்நிலையில் விராத் கோலியின் சறுக்கல் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு அறிவுரைகள் குவிந்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கும் தனது பங்கிற்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி எப்போதுமே தான் செய்யும் வேலைகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்.

- Advertisement -

அதனால்தான் இத்தனை ஆண்டு காலமாக ஒரு சிறப்பான பேட்ஸ்மேனாக ஜொலித்தார். எனவே பழைய நம்பிக்கையை மீண்டும் அவர் மீது அவரே வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி கடந்த பதினைந்து வருடத்தில் இவரைப் போன்று எந்த ஒரு வீரரும் தனது செயல்பாட்டில் அக்கறை காட்டுவதை நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு தனது விளையாட்டில் கவனம் வைத்திருந்த கோலி இனியும் அந்த கவனத்தை மாற்றாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : 9 கோடிக்கு ஒர்த்தான ப்ளேயர் தான். அவரை வாங்குனது தப்பே இல்ல – சேவாக்கின் பாரட்டை பெற்ற இளம் இந்திய வீரர்

இதுபோன்ற மோசமான பார்ம் அனைத்து வீரர்களுக்கும் ஏற்படும் ஒன்று தான். அதனால் தற்போதைய அது குறித்து கவலைப்படாமல் தனது ஆட்டத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தால் நிச்சயம் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement