9 கோடிக்கு ஒர்த்தான ப்ளேயர் தான். அவரை வாங்குனது தப்பே இல்ல – சேவாக்கின் பாரட்டை பெற்ற இளம் இந்திய வீரர்

Sehwag
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே மிகச் சிறந்த போட்டியாக ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டி அமைந்தது. வான்கடே மைதானத்தில் கடைசி பந்து வரை அனல் பறந்த அப்போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 195/6 ரன்கள் குவித்தது.

SRH vs LSG

அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் வீரர் அபிஷேக் சர்மா 65 (42) ரன்களும் ஐடன் மார்க்ரம் 56 (40) ரன்களும் ஷஷாங்க் சிங் 25* (6) ரன்களையும் விளாசிய நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 196 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர்.

- Advertisement -

ஆனால் அப்போது சூறாவளியாக வந்த ஹைதராபாத் இளம் பவுலர் உம்ரான் மாலிக் தனது அசுர வேகப்பந்துகளால் மாலிக் கில் 22 (24) கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 (6) சஹா 68 (38) டேவிட் மில்லர் 17 (19) அபினவ் மனோகர் 0 (1) என ஒவ்வொரு ஓவரிலும் முக்கிய குஜராத் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்து போட்டியை தனது அணியை பக்கம் திருப்பினார்.

Umran Malik 5 Fer

திவாடியா – ரசித் கான் வெற்றி ஜோடி:
அந்த சூழ்நிலையில் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டபோது களமிறங்கிய இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு தோல்வியின் பிடியில் சிக்கிய குஜராத்தை விடுவித்தார். அவருக்கு உறுதுணையாக ரஷித் கான் கைகொடுத்ததால் வெற்றிப் பாதைக்கு திரும்பிய அந்த அணிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 1, 6, 0, 6, 6 என முதலில் திவாடியா சிக்ஸர் பறக்கவிட கடைசி 3 சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ரஷித் கான் குஜராத்துக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

மொத்தத்தில் கிடைக்காது என நினைத்த வெற்றியை 4 பவுண்டரி 2 சிக்சருடன் திவாடியா 40* (21) ரன்களும் 4 சிக்ஸருடன் ரஷித் கான் 31* (11) ரன்கள் எடுத்து குஜராத்தின் வெற்றி ஜோடியாக அனைவரையும் ஆச்சரியமடைய வைத்து பாராட்டுகளைப் பெற்றது. இதில் இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் ஆர்ப்பாட்டமில்லாத பினிஷராகவும் மேஜிக் நிகழ்த்து பவராகவும் வலம் வருகிறார்.

ஒர்த்தானா ப்ளேயார்:
கடந்த 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்காக விளையாடிய அவர் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் இதேபோல தோல்வியின் பிடியில் சிக்கிய தனது அணியை ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதேபோல் பந்துவீச்சில் ஒருசில விக்கெட்டுக்களை எடுக்கும் பவுலராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக சமீபத்திய ஏலத்தில் அவரை 9 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு குஜராத் அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

அந்த அளவுக்கு அவர் ஒர்த் இல்லை என்று நிறைய பேர் பேசிய நிலையில் இந்த வருடம் பஞ்சாப்க்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது 2 சிக்ஸர்களை பறக்க விட்டு தனி ஒருவனாக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ராகுல் திவாடியா நேற்றைய போட்டியில் ரஷித் கான் உடன் இணைந்து அற்புதமான வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 9 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் இப்படி ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று கொடுத்து தாம் அதற்கு தகுதியானவன் என்று நிரூபித்துள்ளதாக முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

Sehwag

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “மில்லர் அவுட்டான பின் திவாடியாவுக்கு மிகப்பெரிய பாரம் ஏற்பட்டது. அதை குறைக்கும் வகையில் ரசித் கான் முக்கிய பங்காற்றினார். அவரின் இடத்தில் ரஷீத் கான் முன்கூட்டியே களமிறங்கியிருந்தாலும் கூட அவரால் சாத்தியமில்லாத நிறைய ரன்களை அடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். எனவே இது போன்ற சிறப்பான செயல்பாடுகளால் அவர் (திவாடியா) தனது அதிகப்படியான விலைக்கு தகுதியானவன் என்று நிரூபித்துள்ளார்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க : வீடியோ : “ஊ சொல்றீயா மாமா” பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி – கலைகட்டிய மேக்ஸ்வெல்லின் ரிஷப்ஷன்

இதே போட்டி பற்றி மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் பாராட்டியது பின்வருமாறு. “கடந்த போட்டியில் ராகுல் திவாடியா அடுத்தடுத்த 2 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் அவரை ரசித் கான் பின்பற்றினார். அவர்கள் இருவரும் இணைந்து 4 சிக்ஸர்கள் அடித்து வெற்றிபெற வைத்தனர். இனி வரும் போட்டிகளில் 20-வது ஓவரை சிறந்த பவுலரை வைத்து வீசுவதற்கு எதிரணிகள் முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement