வீடியோ : “ஊ சொல்றீயா மாமா” பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி – கலைகட்டிய மேக்ஸ்வெல்லின் ரிஷப்ஷன்

Anushka
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் வருடா வருடம் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். பல ஜாம்பவான் வீரர்கள் ஒன்றாக இருந்த போதும் ஒருமுறை கூட இதுவரை பெங்களூரு அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாதது ரசிகர்களின் மத்தியில் பெரிய ஏக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து புதிய கேப்டனாக தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டு பிளிசிஸ் தற்போது பெங்களூரு அணியை வழிநடத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 9 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள பெங்களூர் அணியானது 5 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் தற்போதும் வீரர்கள் உற்சாகமான மனநிலையில் உள்ளனர் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் தமிழ் வம்சாவழியைச் சார்ந்த வினி இராமன் ஆகியோருக்கு பெங்களூரு அணி நிர்வாகம் சார்பாக நேற்று ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அணியின் வீரர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். அதிலும் குறிப்பாக மேக்ஸ்வெல் வரவேற்பு நிகழ்ச்சி ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க பின்னணியில் பாடல்களும் இசைத்துக் கொண்டிருந்தது. அதில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடனமாடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் ஒலிக்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு விராட்கோலி சக வீரர்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போன்று பெங்களூர் அணி வீரர்கள் அனைவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : இந்த வேகத்தில் எந்த கொம்பனாலும் அடிக்க முடியாது! சாதனை படைத்த இளம் வீரருக்கு பெருகும் ஆதரவு

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அணி வீரர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து மிகவும் அழகாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். தற்போது மேக்ஸ்வெல்-இன் வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகளவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement