- Advertisement -
ஆசிய கோப்பை

சூரியகுமார் பெயரை விலங்குடன் ஒப்பிட்டு திட்டிய யூசுப் யுஹானா.. இந்தியாவையும் மட்டமாக விமர்சனம்

ஆசியக் கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குள் சென்ற இந்தியா கடைசிப் போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இருப்பினும் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறியது பெரிய சர்ச்சையாக மாறியது. சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து தக்க பதிலடி கொடுத்தது.

- Advertisement -

சூரியகுமார் இந்தியா பற்றி:

அதன் தொடர்ச்சியாகவே ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணிக்கு இந்தியா கை கொடுக்காமல் புறக்கணித்து பதிலடி கொடுத்தது. மேலும் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை. அந்த வகையில் ஜென்டில்மேன்களாக நின்ற தங்களுடைய அணிக்கு கைகொடுக்காமல் வெளியேறிய இந்திய அணியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய கேப்டன் சூரியகுமாரை பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானா மட்டமாக விமர்சித்துள்ளார். அதாவது இந்தி மொழியில் சுவர் என்றால் பன்றி என்று அர்த்தமாகும். அதை வைத்து சூரியகுமாருக்கு பதிலாக சுவர்யகுமார் என்று சொல்லி யுஹானா விமர்சித்துள்ளார். மேலும் அம்பயர்களை கையில் போட்டுக்கொண்டு இந்திய அணி குறுக்கு வழியில் வெல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மட்டமான விமர்சனம்:

இது பற்றி பாகிஸ்தானில் உள்ள சாமா எனும் தொலைக்காட்சியில் தொகுப்பாளருக்கும் அவருக்கும் இடையே ஹிந்தி மொழியில் நிகழ்ந்த உரையாடல்களின் மொழிமாற்றம் பின்வருமாறு.
யூசுப்: மாயை கோட்டையிலிருந்து இந்தியா தப்ப முடியாது. அவர்களுடைய கேப்டன் சுவர்யகுமார் (என்று சொல்லும் போது தொகுப்பாளர் குறுக்கிடுகிறார்)
தொகுப்பாளர்: அது சூரியகுமார் யாதவ்
யூசுப்: ஆம் அதையே நானும் சொன்னேன். சுவர்யகுமார் யாதவ்

இதையும் படிங்க: ஒரு போட்டிக்கு இத்தனை கோடியா? இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக டயர் நிறுவனம் அறிவிப்பு

தொகுப்பாளர்: இல்லை அவருடைய பெயர், சூரியகுமார் யாதவ்.
யூசுப்: ஓ, சரி. அவர் தான் சுவர்யகுமார். இப்படி போட்டிகளை வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் அம்பயர்களை கூட்டமாக வைத்துக்கொண்டு அவர்களை சித்திரவதை செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.

- Advertisement -