சூப்பர் கார் இருந்தும் ஒர்க் ஷாப்’லயே விட்டுட்டு வந்துட்டீங்க, இந்திய பவுலர் பற்றி ஆஸி ஜாம்பவான் கருத்து

IND
- Advertisement -

வரும் அக்டோபர் 16 முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக பலப்பரிட்சை நடத்தும் உலகின் டாப் 16 அணிகளுக்கு மத்தியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல களமிறங்குகிறது. அதற்காக புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றிநடை போட்ட இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வி பெரிய பின்னடைவை கொடுத்தது. அதைவிட முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

- Advertisement -

ஏனெனில் அவரை தவிர இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். அத்துடன் காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்ட தீபக் சஹர் பும்ராவுக்கு பதிலாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளார். அதனால் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச டி20 போட்டியிலும் பங்கேற்காத சீனியர் முகமது சமி இந்த உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இந்த உலக கோப்பையில் பேட்டிங்கை விட இந்திய பவுலிங் பலவீனமாகவே உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

சூப்பர் காரை விட்டுட்டீங்க:
அதே சமயம் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் மற்றும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசக்கூடிய உம்ரான் மாலிக் ஆகியோருக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்குமாறு நிறைய ஆதரவுகள் குவிந்து வருகின்றன. அதிலும் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் 150 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி மிரட்டும் திறமை பெற்றுள்ள உம்ரான் மாலிக் விளையாடாதது தமக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Umran Malik Rahul Dravid

ஐபிஎல் 2021 தொடரில் அறிமுகமாகி 2022 சீசனில் அதிரடியான வேகத்தில் பந்து வீசி 22 விக்கெட்களை அள்ளிய அவர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி பங்கேற்ற 2 போட்டிகளில் விவேகமின்றி பந்து வீசி ரன்களை வாரி வழங்கியதால் மறு வாய்ப்பு வழங்கப்படாமல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூப்பர் கார் போன்ற வேகத்தை கொண்ட உம்ரான் மாலிக்கை உலகக்கோப்பையில் பயன்படுத்தாமல் ஒர்க் ஷாப்’பிலேயே விட்டு விட்டதாக இந்திய அணி நிர்வாகம் மீது பிரட் லீ மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உம்ரான் மாலிக் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசுகிறார். அதாவது உங்களிடம் உலகிலேயே மிகச் சிறந்த கார் உள்ளது. ஆனால் அதை நீங்கள் கேரேஜ்ஜிலேயே விட்டு விட்டால் அந்த காரை வைத்திருப்பதில் என்ன பயன்? என்னைப் பொருத்தவரை உம்ரான் மாலிக் இந்திய உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆம் மிகவும் இளமையாக தடுமாறினாலும் அவரிடம் 150 வேகம் இருப்பதால் வேகத்தில் பந்துகள் பறக்கக் கூடிய ஆஸ்திரேலியாவுக்கு அவரை கொண்டு வாருங்கள். ஏனெனில் 140 வேகத்தில் வீசுபவருக்கும் 150 வேகத்தில் வீசுபவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது”

Lee

“மேலும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். ஆனால் அவரில்லாமல் இந்தியா சாதிக்க முடியாது என்று நான் சொல்லவில்லை. இருப்பினும் அவரில்லாத அழுத்தம் புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் மீது அதிக பாரத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். அதாவது உம்ரான் மாலிக் இளம் வீரராக தடுமாற்றமாக செயல்பட்டாலும் ஏற்கனவே அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய அவர் வேகத்துக்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலியாவில் பேட்ஸ்மேன்கள் தொடமுடியாத அளவுக்கு மேலும் வேகத்தில் பந்து வீசி வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று பிரட் லீ கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பும்ராவுக்கு பதில் டி20 உ.கோ’யில் விளையாட ஷமியை விட அவரே சரியானவர் – கவாஸ்கர் சொல்லும் காரணம் இதோ

அப்படி இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட உம்ரான் மாலிக் அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பந்து வீச்சாளராக தேர்வாகியுள்ளார். எனவே வரும் காலங்களில் நிச்சயம் அவர் கடினமாக உழைத்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்பலாம்.

Advertisement