பும்ராவுக்கு பதில் டி20 உ.கோ’யில் விளையாட ஷமியை விட அவரே சரியானவர் – கவாஸ்கர் சொல்லும் காரணம் இதோ

Gavaskar
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியதால் 14 பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

Shami

- Advertisement -

புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் என உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள இதர பவுலர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதால் போட்டியின் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்து வீசி வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியது இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் அவருக்கு பதில் ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ள முகமது சமி மற்றும் தீபக் சஹர் ஆகியோரில் முதன்மை அணியில் தேர்வாகப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கவாஸ்கரின் தேர்வு:
அதில் ஒரு கட்டத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்து உலக கோப்பையில் விளையாடும் முதன்மை பவுலராக கருதப்பட்ட தீபக் சஹர் ஐபிஎல் 2022 தொடரில் சந்தித்த காயத்தால் பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து சமீபத்திய தென்னாப்ரிக்க தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறையிலும் அசத்திய அவர் பும்ராவுக்கு பதில் தேர்வாக காத்திருந்தார். ஆனால் மீண்டும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ள அவருக்கு பதில் தற்போது ஷமி தேர்வாக வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

Siraj

இருப்பினும் 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக கழற்றி விடப்பட்ட ஷமி ஐபிஎல் 2022 தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினாலும் கடந்த ஒரு வருடமாக எவ்விதமான சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே அவருக்கு பதில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் 5 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் விருது வென்று நல்ல பார்மில் இருக்கும் முகமது சிராஜ் உலக கோப்பையில் விளையாட தகுதியானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார் என்பதுடன் ஷமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல. இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் ஷமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதை பிரச்சனையாகும்”

Gavaskar

“அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும். அந்த சமயங்களில் உங்களது ஸ்டேமினா குறைந்திருக்கும். மேலும் டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்கள் மட்டும் வீச வேண்டும் என்றாலும் மறுபுறம் அற்புதமாக பந்து வீசும் சிராஜை பாருங்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல என்னதான் ஷமி தரமான பவுலர் என்றாலும் தற்சமயத்தில் அவருடைய பார்ம் எப்படி உள்ளது என்பது தெரியாது.

- Advertisement -

அதையும் தாண்டி நேரடியாக அவர் தேர்வாகும் பட்சத்தில் ரிதம், பார்முக்கு திரும்புவதற்கு முன்பாகவே உலக கோப்பையின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான ஆரம்பக்கட்ட 2 – 3 போட்டிகள் முடிந்து விடும். எனவே ஷமிக்கு பதிலாக தற்சமயத்தில் நன்றாக பந்து வீசும் சிராஜ் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஸ்மித், ரூட், வில்லியம்சன், விராட் கோலி ஆகியோரில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் – இயன் சேப்பல் பதில்

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் சிராஜ் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 15 போட்டிகளில் 9 விக்கெட்களை எடுத்தாலும் 10.08 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார் என்பதால் அவரை யோசித்தே தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement