ஸ்மித், ரூட், வில்லியம்சன், விராட் கோலி ஆகியோரில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் – இயன் சேப்பல் பதில்

Chappell
- Advertisement -

இன்றைய நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகையால் நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளும் 50 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக 5 நாட்கள் நடைபெற்றும் பெரும்பாலும் டிராவில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகள் அலுப்பு தட்டும் வகையில் அமைவதால் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவதில்லை. ஆனால் அதைத் தடுக்க 20 ஓவர், 50 ஓவர் போட்டிகளை போல தனியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் உலக கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியலிருந்து சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகள் உயிர்த்தெழுந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் என்னதான் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் வந்தாலும் ஒரு வீரரின் உண்மையான திறமையும் பொறுமையையும் தன்னம்பிக்கையும் சோதிக்கும் டெஸ்ட் போட்டிகள் தான் உண்மையான கிரிக்கெட்டாகும்.

kohli 1

- Advertisement -

அதனாலேயே டெஸ்ட் என்றழைக்கப்படும் இந்த கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களையே தரமானவர்கள் என வல்லுனர்கள் போற்றுவார்கள். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எளிதாக 50 பந்துகளில் 100 ரன்களை அடித்து விடலாம். ஆனால் கடினமான சிவப்பு நிற பந்தில் மணிக்கணக்கில் நின்று 200 – 300 போன்ற அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு சதமடிப்பது மிகவும் கடினமாகும். அந்த வகையில் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் உலகின் அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து விதமான உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிம்ம சொப்பனமாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்து தங்களது நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற ஒருசிலர் மட்டுமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

சிறந்த பேட்ஸ்மேன்:
இந்த பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 என்ற அபாரமான சராசரியை கொண்டு தன்னை சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக நிரூபித்து வருகிறார். மறுபுறம் ஜோ ரூட்டும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அதே போல் வில்லியம்சனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் நிலையில் இந்தியாவின் விராட் கோலி மட்டுமே டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 என்ற அற்புதமான சராசரியை கொண்டுள்ள ஒரே பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ரூட் போன்றவர்களை விட இந்தியாவின் விராட் கோலி தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய கட்டுரையில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி யோசித்து இயற்கையாகவே போட்டி போட்டு பேட்டிங் செய்யும் அணுகுமுறையுடன் அடித்து ஆடக்கூடிய நல்ல வீரர். அவர் ஏன் அபாயகரமான டெஸ்டில் வெள்ளைப் பந்து ஷாட்டுகளை ஈடுபடுத்துவதில்லை என்று கேட்டதற்கு “எனது டெஸ்ட் ஆட்டத்தில் அவைகள் நுழைவதை நான் விரும்பவில்லை” என்று பதிலளித்தார். இருப்பினும் எதுவாக இருந்தாலும் வயதான செயல்முறை அல்லது கேப்டனாக ஓய்வு பெற்றதால் விராட் கோலியின் வெளியீடுகள் சற்று குறைய தொடங்கியுள்ளது. எனவே அவர் அந்த மேஜிக்கை மீண்டும் எழுப்ப வேண்டும்”

- Advertisement -

“தற்சமயத்தில் நிலவும் திறமையான வீரர்களளில் ஒருவரை தேர்வு செய்வது கடினமாகும். இருப்பினும் அந்த காலத்தில் விக்டர் ட்ரம்பர் தேர்வு செய்த சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக டான் பிராட்மேன் இருந்தது ஆச்சரியமில்லை. ஆனால் தற்போது இருக்கும் சிறந்த வீரர்கள் எப்போதும் கடுமையாக போட்டியிடக்கூடிய விராட் கோலியை மிஞ்சுவது கடினம்.

Joe Root

ஒரே போட்டியில் 2 சதங்களை அடித்த அவருடைய வெற்றி போராட்டம் வீணாகியிருக்கலாம். ஆனால் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் 2014ஆம் ஆண்டு அவர் விளையாடிய இன்னிங்ஸ் தற்போது இருக்கும் வீரர்களிடையே எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் ஆகும்” என்று கூறினார். அதாவது ரூட், ஸ்மித் போன்றவர்கள் ரன்களைக் குவிப்பதில் மும்முரத்தை காட்டினாலும் போட்டி போடுவதில் அவர்கள் யாருமே விராட் கோலியை மிஞ்ச முடியாது என்று தெரிவிக்கும் இயான் சேப்பல் :

இதையும் படிங்க : ஏற்கனவே பாகிஸ்தான் ஏ டீம் கங்குலி தலைமையிலான இந்தியாவை தோற்கடிச்சுருக்கு ஆனால் – முன்னாள் பாக் வீரர் கருத்து

அதனாலேயே அவர் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் வயது மற்றும் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ததால் சமீப காலங்களில் அவரது ஆட்டத்தில் மந்தம் தெரிவதாக கூறும் அவர் அதையெல்லாம் கடந்து மீண்டும் விராட் கோலியிடம் பழைய மேஜிக்கை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement