- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதைமட்டும் செய்ஞ்சா போதும் இன்னும் 5 வருஷம் ரோஹித் சர்மா விளையாடலாம் – யுவராஜ் சிங் தந்தை பேட்டி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.

ரோஹித் சர்மா இதை செய்தால் 5 ஆண்டுகள் ஆடலாம் : யோக்ராஜ் சிங்

ஆனாலும் தொடர்ந்து தான் 2027 வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் அடுத்த ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும் அப்போது ரோகித் சர்மா 40 வயதை எட்டி விடுவார் என்பதனாலும் அவரது இடம் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் நிரந்தரம் கிடையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்தும், அவரது உடற்தகுதி குறித்தும் சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவால் 45 வயது வரை விளையாட முடியும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரோகித் சர்மா இந்திய அணிக்கு அவசியம் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோஹித் சர்மா சிங் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான கடினமான போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த ஒரு ஆட்டம் அவருடைய திறன் என்ன என்பதை வெளிகாட்டுகிறது. அவரால் நிச்சயம் 45 வரை விளையாட முடியும். தேவைப்பட்டால் தினமும் 10 கிலோமீட்டர் அவரை ஓட வையுங்கள். அப்படி அவரை பயிற்சி செய்ய சொன்னால் நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை அவரால் விளையாட முடியும்.

இதையும் படிங்க : 6, 6, 6, 6.. வெளியே பறந்த 3 சிக்ஸ்.. 22 பந்தில் 50.. ஆஸியை மீண்டும் வெளுத்த ப்ரேவிஸ்.. 11 வருட உலக சாதனை

ரோஹித் சர்மா போன்ற ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து தூக்கி எறியக்கூடாது. அவரை உள்ளடக்கிய யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை என்னால் உருவாக்க முடியும் என யோக்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -