ஆஸ்திரேலிய மண்ணில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி கைர்ன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த பிரிட்டோரியஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (15) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதே போல மறுபுறம் தடுமாறிய ரிக்கல்டன் 13 ரன்னில் நடையைக் கட்டினார்.
மீண்டும் மிரட்டிய ப்ரேவிஸ்:
அதனால் 49/3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மிடில் ஆர்டரில் தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடினார். கடந்தப் போட்டியில் சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்தப் போட்டியிலும் வேகமாக ரன்களை குவிக்கத் துவங்கினார். குறிப்பாக ஆரோன் ஹார்டி வீசிய 10வது ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்காத ப்ரேவிஸ் 2வது பந்தில் டபுள் எடுத்தார்.
அடுத்த 3 பந்துகளில் 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை மைதானத்துக்கு வெளியேற விழும் அளவுக்கு பறக்க விட்ட அவருக்கு எதிராக கடைசி பந்தை ஹார்டி ஒயிட் போட்டார். அதற்காக வீசப்பட்ட மறு பந்திலும் சிக்ஸர் பறக்க விட்ட ப்ரேவிஸ் 22 பந்தில் அரை சதத்தை அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை ப்ரேவிஸ் படைத்துள்ளார்.
உலக சாதனை 50:
இதற்கு முன் 2014ஆம் ஆண்டு ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ரவி போபாரா 23 பந்துகளில் 50 அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேகமாக அரை சதத்தை அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற தனது சொந்த சாதனையையும் (கடந்த போட்டியில் 25 பந்துகளில் 50) அவர் உடைத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் ஒரு பவுண்டரி 6 சிக்சருடன் 53 (26) ரன்னில் அவுட்டானார்.
இதையும் படிங்க: அந்த 4 லெஜெண்ட்ஸ் இல்லாமையே ஜெய்ச்ச இந்தியாவுக்காக.. பும்ரா தான் இதை அட்ஜஸ்ட் பண்ணனும்.. மஞ்ரேக்கர் பேட்டி
அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடிய ஸ்டப்ஸ் 25 (23) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ராசி வேன் டெர் டுஷன் 38* (26), முத்துசாமி 9, ரபாடா 4* ரன்கள் எடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்கா 172/7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு ஜோஸ் ஹேசல்வுட் 2, ஆடம் ஜாம்பா 2, நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.



