- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெய்லி 4 பேரை வெச்சு ரோஹித்தை 10 கி.மீ ஓடவிட்டா.. இந்தியாவுக்காக 45 வரை க்ளாஸ் காமிப்பாரு.. யோக்ராஜ் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா 2006 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். சுமார் 20 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். ஒரு வீரராக 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல உதவிய அவர் இந்தியாவின் கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றுள்ளார்.

ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ள அவர் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றார். சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடிய அவர் இங்கிலாந்து தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தார். அடுத்ததாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப்போகும் அவர் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

10 கிலோ மீட்டர் ஓடவிடுங்க:

ஆனால் 2027இல் 40 வயதில் அவரால் நல்ல ஃபிட்னஸை கடைப்பிடித்து இந்தியாவுக்காக அசத்த முடியுமா? என்று தேர்வுக்குழு சந்தேகிக்கிறது. அதனால் வரும் அக்டோபர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவரையும் விராட் கோலியையும் தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் ரோஹித் சர்மா 45 வரை இந்தியாவுக்காக விளையாடும் திறமையையும் கிளாஸையும் கொண்டிருப்பதாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அதற்கு அவசியமான ஃபிட்னஸை பெற ரோஹித்தை தினம்தோறும் 10 கிலோமீட்டர் ஓட விட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவை பற்றி பலரும் குப்பையாக பேசுகிறார்கள். ஆனால் ரோஹித் போட்டி நாளில் என்னுடைய தேர்வாக இருப்பார். அவர் பேட்டிங் செய்த விதமும் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதமும் வித்தியாசமானது”

- Advertisement -

45 வயது வரை:

“அவருடைய ஆட்டமும் எதிர்புறம் உலகில் உள்ள மற்றவர்களின் ஆட்டமும் வித்தியாசமானது. அது தான் அவருடைய கிளாஸ். எனவே ரோகித் நமக்கு 5 வருடங்கள் தேவை. நாட்டுக்காக நீங்கள் அதிகம் வேலை செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் ஃபிட்னஸ் போன்ற விஷயங்களில் வேலை செய்ய வேண்டும். அவருடன் 4 பேரை போடுங்கள்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் இந்தியாவை புதிய பாகிஸ்தான் தோற்கடிக்கும்.. காரணம் இது தான்.. செலக்டர் ஜாவேத் பேட்டி

“தினமும் காலையில் அவரை 10 கிலோமீட்டர் ஓட வையுங்கள். அதை செய்தால் அவரிடம் 45 வயது வரை விளையாடும் கிளாஸ் இருக்கிறது. அதே போல நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடும் போது உங்களுடைய ஃபிட்னஸ் அதிகமாகும். 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்றது யார்? ரோஹித் சர்மா. எனவே அவரைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?” என்று விமர்சகர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -