ஆசிய கோப்பையில் இந்தியாவை புதிய பாகிஸ்தான் தோற்கடிக்கும்.. காரணம் இது தான்.. செலக்டர் ஜாவேத் பேட்டி

Aqib Javed
- Advertisement -

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை அத்தொடர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு நாடுகளில் முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளது.

அந்த 2 தொடர்களுக்கான அணியை பாகிஸ்தான் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக அறியப்படும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடிக்க அவர்கள் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

புதிய பாகிஸ்தான்:

அதைத் தவிர்த்து மற்ற தொடர்களில் அவர்கள் சுமாராக விளையாடியது பாகிஸ்தானின் தோல்விகளுக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக அவர்களுடைய மோசமான ஆட்டத்தால் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்விகளை சந்தித்தது. அதனால் தற்போது அவர்களை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் வாரியம் சல்மான் ஆகா தலைமையில் புதிய அணியை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பாபர், ரிஸ்வான் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் சல்மான் ஆகா தலைமையிலான புதிய பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. அதே அணியை தற்போது ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த அணியில் நிறைய இளம் வீரர்களுடன் பகார் ஜாமான், ஷாகின் அப்ரிடி போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர்.

- Advertisement -

இந்தியாவை தோற்கடிப்போம்:

எனவே தங்களுடைய புதிய பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கும் என்று ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார். அந்த அணியை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த பாகிஸ்தான் அணியிடம் ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கும் திறன் இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் இல்லையென்றாலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் உலக கிரிக்கெட்டில் மிகவும் பெரியது”

இதையும் படிங்க: பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு – விவரம் இதோ

“இதை ஒவ்வொரு வீரர்களும் அறிவார்கள். எங்களுடைய அணி எந்த எதிரணியையும் வீழ்த்தும் திறமையைக் கொண்டுள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள். தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே எமாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே வேறு எதையும் சொல்லி எங்கள் அணி மீது நாங்கள் எஸ்ட்ரா அழுத்தத்தைப் போட விரும்பவில்லை” என்று கூறினார்.

Advertisement