பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு – விவரம் இதோ

Babar Azam and Rizwan
- Advertisement -

2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் தேர்வுக்குழுவினர் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு :

ஆனால் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் மற்ற அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் அணியானது எதிர்வரும் இந்த 2025 ஆசிய கோப்பை தொடர்கான பாகிஸ்தான் அணியை ஆகா சல்மான் தலைமையில் 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதில் நட்சத்திர வீரர்கள் இருவருக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரின் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் : இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இரண்டு பிரிவுகளிலும் இடம் பெற்று இருக்கும் அணிகள் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் தலா ஒரு போட்டியில் விளையாடும். அதில் தகுதி பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றில் விளையாடும். பின்னர் செப்டம்பர் 28- ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணியானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக சல்மான் ஆகா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் பகார் சமான், ஷாஹின் அப்ரிடி, சயீம் ஆயுப், ஹாரிஸ் ராவுப் உள்ளிட்ட 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : சுப்மன் கில்லின் கம்பேக்கால் ரிங்கு சிங்கின் இடத்திற்கு வரப்போகும் ஆபத்து? இதுவும் போச்சா? – விவரம் இதோ

இந்த அணியில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வான் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2024 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்காக டி20 போட்டியில் விளையாடிய பாபர் அசாம் மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் விக்கெட் கீப்பராக முகமது ஹாரிஸ் என்ற இளம் வீரரை தேர்வு செய்ததால் முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement