- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கபில் தேவ் மேட்ச் பிக்ஸிங் செஞ்சதை இதனால் தான் மறைச்சாங்க.. 1997 பிரபாகர் குற்றசாட்டு பற்றி யோக்ராஜ்

ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் கபில் தேவ் இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த கிரிக்கெட்டராக போற்றப்படுகிறார். அவருடைய தலைமையில் இந்தியா 1983 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. அந்த வெற்றி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தது. அந்த வெற்றியே இந்தியாவில் இன்று கிரிக்கெட் ஆழமாக வேறொன்றுவதற்கான வித்தாக அமைந்தது.

மேலும் சச்சின் டெண்டுல்கர் போன்ற நிறைய இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான உத்வேகத்தையும் கொடுத்தது. அப்படிப்பட்ட கபில் தேவ் மீது 1997ஆம் ஆண்டு சக வீரர் மனோஜ் பிரபாகர் சூதாட்டம் செய்ய பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 1984 – 1995 வரையிலான காலகட்டங்களில் மனோஜ் பிரபாகர் இந்தியாவுக்காக 39 டெஸ்ட் மற்றும் 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

- Advertisement -

ஃபிக்சிங் செய்தாரா கபில் தேவ்:

அந்தக் காலகட்டங்களில் கபில் தேவ் தலைமையிலும் அவர் விளையாடினார். அப்போது ஒருமுறை இந்தியாவுக்காக மோசமாக விளையாடுவதற்காக கபில் தேவ் தமக்கு பணம் கொடுத்ததாக 1997ஆம் ஆண்டு பிரபாகர் குற்றம் சாட்டினார். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ பிரபாகர் சாட்டிய குற்றத்திற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது.

அதனால் கபில் தேவ் மேல் எந்த குற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதே போல பிசிசிஐ அமைத்த ஒய்.வி. சந்திரசூட் தலைமையிலான விசாரணைக் குழு “மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளை புகாரளிக்க மனோஜ் பிரபாகர் 3 – 6 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதற்கு என்ன நம்ப தகுந்த காரணமும் இல்லை” என்று 2000ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அதனால் மனோஜ் பிரபாகரை இந்திய கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ தடை விதித்தது.

- Advertisement -

யோக்ராஜ் கேள்வி:

இந்நிலையில் மனோஜ் பிரபாகர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றிய வழக்கு கட்டாயமாக மூடப்பட்டதாக கபில் தேவ் தலைமையில் விளையாடிய முன்னாள் இந்திய வீரர் யோஜ்ராஜ் சிங் விமர்சித்துள்ளார். கபில் தேவ் போன்ற பல ஜாம்பவான்களின் தலை உருளும் என்பதற்காகவே அந்த வழக்கு ஒருதலைபட்சமாக முடிக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். யுவ்ராஜ் சிங் தந்தையான அவர் இது பற்றி இன்சைட் ஸ்போர்ட் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 66க்கு அவுட்.. ஃபைனலில் மோசமான உலக சாதனை படைத்த ஆப்கானை ஓடவிட்ட பாகிஸ்தான்.. நவாஸ் ஹாட்ரிக் சாதனை

“உச்சநீதிமன்றத்தில் மூடப்பட்ட மேட்ச் ஃபிக்ஸிங் கோப்பு (ஃபைல்) எங்கே உள்ளது என்று அனைத்து பத்திரிக்கையாளர்களும் கேளுங்கள். மேட்ச் பிக்சிங்கில் யார் யார் ஈடுபட்டார்கள்? என்று கேளுங்கள். ஏனெனில் முதலில் கபில் தேவ் பெயர் வந்தது. பின்னர் முகமது அசாருதீன் போன்ற பல வீரர்களின் பெயர் சம்பந்தப்பட்டது. அந்த மூடப்பட்ட கோப்பு ஏன் மீண்டும் திறக்கப்படவில்லை? ஏனெனில் அதைத் திறந்தால் பல ஜாம்பவான்களின் தலைகள் உருளும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -