- Advertisement -
இந்திய கிரிக்கெட்

35 பந்தில் 100 அடிச்சு என்ன யூஸ்.. அந்த 5 நாள் தாக்கு பிடிக்க முடியுமா? சூர்யவன்சிக்கு யோக்ராஜ் சவால்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்தது. இருப்பினும் அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்தது. அதே சமயம் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்த அந்த 2 அணிகளுக்கும் வருங்காலத்தில் அசத்துவதற்கு தேவையான இளம் வீரர்கள் கிடைத்தார்கள்.

குறிப்பாக ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி முதல் பந்திலேயே சிக்சர் அடித்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை விட குஜராத்துக்கு எதிராக 35 பந்தில் 100 ரன்கள் தொட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரராக உக்காக சாதனை படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

- Advertisement -

என்ன பயன்:

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 35 பந்தில் 100 ரன்கள் அடிப்பதால் மட்டும் சூர்யவன்சி தரமான பேட்ஸ்மேன் என்று சொல்லி விட முடியாது என முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். மாறாக 5 நாட்களைக் கொண்ட சவாலான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சாதிக்க முடியுமா? என்றும் சூரியவன்சிக்கு அவர் சவால் விடுத்துள்ளார். அதுவரை டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதில் எந்த பயனும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“என்னுடைய தொலைநோக்கு பார்வை டெஸ்ட் போட்டிகள். அதில் உங்களால் 5 நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? அதுவே உண்மையான சோதனையாகும். 50 ஓவர் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் உங்களை சோதனை செய்யப் போதுமானது. ஆனால் நான் அந்த 2 ஃபார்மட்டுகளுக்கு செல்ல மாட்டேன். நீங்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருக்கிறீர்களா?”

- Advertisement -

யோக்ராஜ் சவால்:

“நீங்கள் ஏன் தடுமாறுகிறீர்கள்? ஏனெனில் நீங்கள் டி20, ஐபிஎல் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறீர்கள். அதனால் இப்போதெல்லாம் நம்மால் 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாட முடிவதில்லை. அது தான் நம்முடைய வழியாக இருக்கிறது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இதை மாற்ற வேண்டும்”

இதையும் படிங்க: 73/7 டூ 134/8.. ஃபைனலில் 2 தவறால் கைக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விடும் தெ.ஆ.. ஆஸி முன்னிலை

“48 டிகிரி செல்சியஸில் ஆர்வத்துடன் வேலை செய்ததாலேயே என்னால் யுவராஜ் சிங் போன்ற வீரரை உருவாக்க முடிந்தது. அது போல உங்களால் 5 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாட முடியுமா? அது தான் ஒரு வீரருக்கு உண்மையான சோதனையாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதுள்ள பெரும்பாலான இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -