ராயுடு கொடுத்த வாய்ப்பின் மூலம் சி.ஸ்.கே அணிக்கெதிராக சாதனையை நிகழ்த்திய – யாஷஷ்வி ஜெய்ஷ்வால்

jaiswal 1
jaiswal 1 RR
- Advertisement -

14-வது ஐபிஎல் தொடரின் 47-ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அந்த அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அதிரடி காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

cskvsrr

- Advertisement -

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 60 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். அதேபோன்று ஜடேஜா 15 பந்துகளை சந்தித்து 32 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கம் முதலே தங்களது அதிரடி வெளிப்படுத்தி 15 பந்துகளில் மீதமிருக்கும் வேளையில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரர்கள் கொடுத்த அருமையான பார்ட்னர்ஷிப் காரணமாக அமைந்தது. ஏனெனில் கிட்டத்தட்ட முதல் 6 ஓவர்களில் 80 ரன்கள் குவித்து போட்டியை அங்கேயே அவர்கள் முடித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக இளம் வீரரான ஜெய்ஸ்வால் 21 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரி என 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

jaiswal 2
jaiswal 2 RR

அவரது இந்த சிறப்பான துவக்கம் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அருமையான வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது என்று கூறலாம். மேலும் இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் துவக்கத்திலேயே அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ராயுடு தவறவிட்டார். அதன் பின்னர் அதனை பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

- Advertisement -
jaiswal
jaiswal RR

அந்த சாதனையை யாதெனில் : இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடாத வீரர்களில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் இஷன் கிஷன் 17 பந்துகளில் அரை சதம் அடித்து முதலிடத்தில் இருந்தாலும் அவரைத் தொடர்ந்து 19 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த “அன் கேப்புடு இந்தியன் பிளேயர்” என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்த மாதிரி விளையாடுனா. எல்லா அணிக்கும் பயம் வரும் – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த சாம்சன்

19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாக நிச்சயம் இந்திய அணியிலும் அவர் விரைவில் விளையாட வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement