இந்த மாதிரி விளையாடுனா. எல்லா அணிக்கும் பயம் வரும் – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த சாம்சன்

samson
- Advertisement -

அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்கை அளித்த அற்புதமான போட்டியாக அமைந்தது. ஏனெனில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது 189 ரன்களை குவித்து அதிரடி காண்பிக்க அடுத்ததாக எளிதாக சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் துவக்கம் முதலே பவுண்டரிகளை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

cskvsrr

- Advertisement -

குறிப்பாக பவர் பிளே ஓவர்களிலேயே 6 ஓவர்களுக்கு கிட்டத்தட்ட 80 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அது தொடர்ந்து தங்களது அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தியது. பலம் வாய்ந்த சிஎஸ்கே அணியிடம் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களுமே தங்களது அதிரடியை வெளிப்படுத்தினர்.

ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா ? என்று ஆரம்பத்தில் நினைத்த வேளையில் போட்டியை 15 பந்துகள் முன்னதாக 17.3 ஓவர்களிலேயே 190 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த அளவிற்கு இந்த போட்டி இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது மிக அதிரடியாக இருந்தது. ஏற்கனவே பிளேஆப் சுற்றின் 4-வது இடத்திற்கு கடுமையான போட்டி நடைபெற்று வரும் வேளையில் ராஜஸ்தான் அணி நல்ல ரேட்டுடன் இந்த வெற்றியை பெற்றுள்ளதால் பிளேஆப் வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.

dube

இனிவரும் போட்டிகளில் ராஜஸ்தான் அணி இவ்வாறு தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்துகொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் குறித்தும் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

gaikwad 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் இன்று விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் போது நிச்சயம் பயம் இருக்கும். இதே போன்று அவர் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் அனைத்து எதிர் அணிகளுக்கும் அந்த பயம் இருக்கும்.

இதையும் படிங்க : நான் செஞ்சுரி அடிக்கிறத பத்தி யோசிக்கல. அதைவிட எனக்கு இதுதான் முக்கியம் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

அவர் ப்ராப்பரான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடுகிறார். அதுமட்டுமின்றி எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரன்களை சேர்க்கிறார். இந்த போட்டியில் அவர் சதம் அடித்தது ஒரு நல்ல இன்னிங்ஸ். அவரது பேட்டிங்கிற்கு நாம் மரியாதை கொடுத்தாக வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement