63 ரன்ஸ்.. போராடிய திலக் வர்மா.. மும்பையை வீழ்த்திய டெல்லி.. சிஎஸ்கேவை முந்தி மாஸ் கம்பேக்

https://crictamil.in/category/cricket/
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 43வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு ஜேக் பிரேசர்-மெக்குர்க் அதிரடியாக விளையாடினார்.

அந்த வகையில் வெறும் 15 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் 11 பவுண்டரி 6 சிக்சருடன் 84 (27) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அவருடன் எதிர்புறம் 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அபிஷேக் போரேல் 36 (27) ரன்களை விளாசி அவுட்டானார். அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்ட சாய் ஹோப் 41 (17) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 29 (19) ரன்கள் விளாசி டெல்லியை வலுப்படுத்தினார்கள்.

- Advertisement -

டெல்லி கம்பேக்:
இறுதியில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 48* (25) ரன்களும் அக்சர் பட்டேல் 11* (6) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் 257/4 ரன்கள் எடுத்த டெல்லி தங்களுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. மும்பைக்கு பியூஸ் சாவ்லா, லுக் வுட், பும்ரா, நபி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 258 ரன்களை துரத்திய மும்பைக்கு தடுமாற்றமாக விளையாடிய ரோகித் சர்மா 8 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த இசான் கிசான் 20 (14) ரன்களில் நடையை கட்டினார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்டாலும் 26 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 65/3 என தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக 2 குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை மீட்டெடுத்த இந்த ஜோடியில் முக்கிய ஹர்திக் பாண்டியாவை 46 (24) ரன்களில் அவுட்டாக்கிய ரசிக் சலாம் அடுத்து வந்த நேஹல் வதேராவை 4 ரன்களில் காலி செய்தார். அப்போது வந்த டிம் டேவிட் சரவெடியான 37 (17) ரன்களை விளாசி திருப்புமுனையை உண்டாக்கி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த முகமது நபி 7 ரன்னில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் திலக் வர்மா தொடர்ந்து அரை சதமடித்து போராடியதால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 25 ரன் தேவைப்பட்டது. ஆனால் அப்போது முதல் பந்திலேயே டபுள் எடுக்க முயற்சித்த அவர் 63 (32) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் கடைசியில் பியூஸ் சாவ்லா 10, லுக் வுட் 9* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் மும்பையை 247/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய டெல்லி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இப்படியே போனா உ.கோ ஜெய்க்க முடியாது.. இந்தியாவுக்காக பாண்டியா என்ன செஞ்சுட்டாரு? பதான் விமர்சனம்

அந்த அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, ரசிக் சலாம் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்த டெல்லி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னையை (8) பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது. குறிப்பாக முதல் 5 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று கம்பேக் கொடுத்துள்ளது. மறுபுறம் போராடி 6வது தோல்வியை மும்பையின் பிளே ஆஃப் 50% வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement