நான் செஞ்சுரி அடிக்கிறத பத்தி யோசிக்கல. அதைவிட எனக்கு இதுதான் முக்கியம் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

Gaikwad-1

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்ற இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் தற்போதைய 14வது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிஎஸ்கே அணியின் முதன்மை துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். அணியில் சீனியர் வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கெய்க்வாட் இந்த தொடர் முழுவதுமே சிஎஸ்கே அணிக்காக பேட்டிங்கில் வலிமை சேர்த்து வருகிறார்.

gaikwad 2

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் துவக்க வீரர் டு பிளிசிஸ் 25 ரன்களிலும், ரெய்னா 3 ரன்களிலும், மொயீன் அலி 21 ரன்களிலும், ராயுடு 2 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேற ஒருபக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் சிறப்பாக விளையாடினார். முதல் 43 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் அடுத்த 17 பந்துகளில் சதம் கடந்தார். அதாவது மொத்தம் 60 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார்.

- Advertisement -

இதுவரை சிஎஸ்கே அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 611 ரன்களை குவித்துள்ளார். இதில் ஆறு அரை சதமும், ஒரு சதமும் அடங்கும். அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் அடித்த சதம் மூலம் அவர் இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ரவீந்திர ஜடேஜாவும் 15 பந்துகளில் 32 ரன்களை குவிக்க சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 189 ரன்களை குவித்தது.

gaikwad

அதன்பின்னர் முதல் இன்னிங்சில் தான் விளையாடிய விதம் குறித்து ஆட்ட நேர இடைவெளியில் பேசிய ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த மைதானம் ஆரம்பத்தில் சற்று நின்று வந்தது. பவர் பிளேவில் நாங்கள் விக்கெட் இழப்பின்றி விளையாடியதால் நிச்சயம் 13-14 ஆவது ஓவர் வரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று யோசித்தேன். மேலும் அப்படி நின்றால் நிச்சயம் அதன் பிறகு இன்னிங்சை பில்ட் செய்ய முடியும் என்று நினைத்து விளையாடினேன். அதன்படி நான் நினைத்தவாறே இறுதிவரை நின்று விளையாடினேன்.

- Advertisement -

Gaikwad 3

பெரிய பெரிய சிக்சர்களை அடிக்கும்போது சரியான டைமிங் மற்றும் என்னுடைய உடல் அசைவுகளை மாற்றாமல் விளையாடினேன். நான் சதம் அடிப்பது பற்றி பெரிதாக யோசிக்கவில்லை ஏனெனில் எப்போதும் அணியின் ஸ்கோர் தான் முக்கியம். தனிப்பட்ட வீரர்களின் ஸ்கோர் முக்கியம் கிடையாது என்பதை நினைப்பவன் நான். ஒருகட்டத்தில் 160 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று நினைத்தேன். அதன்பின்னர் 170, 180 ரன்கள் அடிக்க முடியும் என்று நினைத்தேன். இறுதியில் நாங்கள் 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மகிழ்ச்சி என்று கூறினார்.

இதையும் படிங்க : இவரை அணியில் சேர்த்தோம். சி.எஸ்.கே அணியை தோக்கடிச்சிட்டாரு – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடைசி பந்தை சிக்ஸ் அடிக்கும் போது பவுண்டரி லைன் சிறியதாக இருந்ததை கவனித்தேன். நிச்சயம் அது சிக்சருக்கு செல்லும் என்றும் தான் நினைத்ததாக கெய்க்வாட் தெரிவித்தார். இப்படி சிஎஸ்கே அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement