இவரை அணியில் சேர்த்தோம். சி.எஸ்.கே அணியை தோக்கடிச்சிட்டாரு – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

Samson
- Advertisement -

அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டி இந்த இரண்டாம் பாகத்தில் நடைபெற்ற ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைந்தது. முதலில் விளையாடிய சென்னை அணியானது 189 ரன்களை குவிக்க அடுத்ததாக 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி தற்போது இருக்கும் வலிமையை பொறுத்தவரையில் நிச்சயம் ராஜஸ்தான் அணி இந்த இலக்கை எட்டாது என்றே பலரும் நினைத்திருப்பார்கள்.

gaikwad

- Advertisement -

ஆனால் அந்த கருத்தை மாற்றிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகியோர் பவர்ஃபிளே ஓவர்களிலேயே சென்னை அணியின் தோல்வி உறுதி செய்தனர். ஏனெனில் முதல் 5.2 ஓவர்களுக்கு 77 ரன்களை எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணியானது பவர்ப்ளே முடிவில் 6.1 ஓவர்களில் 81 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்த முதல் 6 ஓவர்களில் அந்த அணி 81 ரன்களை குவித்ததால் மீதமுள்ள 84 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சிவம் துபே 42 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை பிரம்மாண்டமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

dube

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் கூறுகையில் : எங்களுடைய பேட்டிங் லைனில் உள்ள பவர் எங்களுக்கு தெரியும். அதனால் தான் நாங்கள் எப்போது தோற்றாலும் சற்று வருத்தமாக இருக்கும். இந்த விக்கெட் கடைசி 3-4 ஓவர்களில் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. நிச்சயம் இரண்டாவது இன்னிங்சில் இந்த இலக்கை எங்களால் துரத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம்.

- Advertisement -

dube 1

அதன்படி விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது எங்களுக்கு கிடைத்த ஓபனிங் பார்ட்னர்ஷிப் மிக அருமையான ஒன்று. பவர் பிளே ஓவர்களிலேயே அவர்கள் கிட்டத்தட்ட போட்டியை முடித்து கொடுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் விளையாடிய விதம் சென்னை அணியை முடக்கியது. அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக உள்ளது. நிச்சயம் அவரால் இன்னும் பெரிய இடத்திற்கு செல்ல முடியும்.

இதையும் படிங்க : 190 ரன்கள் அடித்தும் நாங்கள் இந்த போட்டியில் தோற்க இதுவே காரணம் – தோனி வெளிப்படை

அதோடு கடந்த இரண்டு மூன்று போட்டிகள் ஆகவே ஷிவம் துபேவை அணியில் எடுக்க ஆலோசித்து வந்தோம். அதன்படி இன்றைய நாள் அவருடைய நாளாக அமைந்தது. பயிற்சியின் போது எப்போதும் கடினமாக விளாசி பயிற்சி செய்யும் அவர் சிஎஸ்கே அணியும் வீழ்த்திவிட்டார். அவரை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கெதிரான வெற்றி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement