இன்னும் 22 ரன்கள் அடிச்சா போதும்.. விராட் கோலியின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் என 861 ரன்களை அடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் நான்காவது போட்டியுடன் சேர்த்து பல்வேறு சாதனைகளை தனது கரியரின் ஆரம்ப கட்டத்திலேயே நிகழ்த்தி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் மேலும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்களுடன் 545 ரன்கள் குவித்து தனது பிரமாதமான பார்மை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அதோடு இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் மேலும் 111 எண்கள் குவிக்கும் பட்சத்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு காத்திருக்கிறது.

ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு தொடரில் அதிகபட்ச ரன்களை எட்டிய வீரராக தற்போது விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவ்வேளையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 73 ரண்களை குவித்த ஜெய்ஸ்வால் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் இரண்டவது இன்னிங்சில் இன்னும் 22 ரன்களை குவிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் 656 ரன்களை குவித்த விராட் கோலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 73 ரன்கள் மற்றும் 16 ரன்கள் என 89 ரன்களை சேர்த்துள்ள வேளையில் மேலும் 22 ரன்களை சேர்த்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : 338 ரன்ஸ் 9 விக்கெட்ஸ்.. நடப்பு சாம்பியன் புஜாரா அணியை வெளியேற்றிய தமிழ்நாடு.. 7 வருடம் கழித்து சாதித்தது எப்படி?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 152 ரன்கள் தேவை என்கிற நிலையில் நிச்சயம் இந்த சாதனையை நான்காவது போட்டியின் நான்காவது நாளில் அவர் நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இளம் வயதிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் மேலும் பல சாதனைகளை இந்து தொடரில் படைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement