338 ரன்ஸ் 9 விக்கெட்ஸ்.. நடப்பு சாம்பியன் புஜாரா அணியை வெளியேற்றிய தமிழ்நாடு.. 7 வருடம் கழித்து சாதித்தது எப்படி?

Ranji Trohy 2
- Advertisement -

இந்தியாவின் பழமை மிகுந்த உள்ளூர் டெஸ்ட் தொடருக்கான ரஞ்சிக் கோப்பை 2024 சீசன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் சாய் கிஷோர் தலைமையில் விளையாடி வரும் தமிழ்நாடு அணி லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பற்றி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற காலிறுதி போட்டியில் தமிழ்நாடு நடப்புச் சாம்பியன் சௌராஷ்டிராவை எதிர்கொண்டது.

கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி தமிழ்நாடு பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு நட்சத்திர வீரர் புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சாதித்த தமிழ்நாடு:
அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுக்க தமிழ்நாடு சார்பில் கேப்டன் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 338 ரன்கள் எடுத்தது. தமிழக அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 60, பாபா இந்திரஜித் 80, பூபதி குமார் 65 ரன்கள் குவித்தனர்.

சௌராஷ்ட்ரா சார்பில் அதிகபட்சமாக சைரங் ஜானி 3, கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 2, தர்மேந்திர சிங் ஜடேஜா 2, பார்த் புட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 155 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய சௌராஷ்டிரா பெரிய ரன்கள் குவித்து போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் தமிழக பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் செடேஸ்வர் புஜாரா தன்னுடைய அனுபவத்தைக் பயன்படுத்தி நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 170 பந்துகள் எதிர்கொண்டு அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்து முழு மூச்சுடன் போராடினார். ஆனால் அவரையும் தக்க நேரத்தில் அவுட்டாக்கிய தமிழக கேப்டன் சாய் கிஷோர் மொத்தம் 4 விக்கெட்டுகள் எடுத்து சௌராஷ்டிராவை ஆல் அவுட் செய்ய முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: சர்பராஸ் கானை குத்திக்காட்டி ஜுரேலுக்கு பாராட்டு? கொந்தளித்த ரசிகர்கள்.. பின்வாங்கிய சேவாக்.. நடந்தது என்ன?

அவருடன் சந்திப் வாரியர், 3 அஜித் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் மீண்டும் பேட்டிங் செய்யாமலேயே இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி வலுவான நடப்புச் சாம்பியன் சௌராஷ்ட்ராவை இத்தொடரிலிருந்து வெளியேற்றியது. அத்துடன் 2016க்குப்பின் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையின் செமி ஃபைனலுக்கும் தமிழ்நாடு தகுதி பெற்று சாதித்துள்ளது. இந்த வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்ததும் கேப்டன் சாய் கிஷோர் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்ததும் முக்கிய பங்காற்றியது.

Advertisement