சர்பராஸ் கானை குத்திக்காட்டி ஜுரேலுக்கு பாராட்டு? கொந்தளித்த ரசிகர்கள்.. பின்வாங்கிய சேவாக்.. நடந்தது என்ன?

Virender Sehwag 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ராஞ்சியில் மோதி வரும் நான்காவது போட்டி இறுதிக்கட்டத்தை இயற்றியுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்த உதவியுடன் 353 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக விளையாடி 307 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73, துருவ் ஜுரேல் 90 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் எடுத்த தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 145 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மறுத்த சேவாக்:
இறுதியில் 192 ரன்களை துரத்தும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருப்பதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 177/7 என தடுமாறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து அபாரமாக விளையாடிய துருவ் ஜுரேல் 90 ரன்கள் அடித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.

அப்போது விரேந்தர் சேவாக் ட்விட்டரில் பாராட்டியது பின்வருமாறு. “ட்ராமா இல்லை. ஊடகங்களின் மிகைப்படுத்துதல் இல்லை. ஆனால் கடினமான சூழ்நிலையில் மகத்தான பொறுமையை காட்டினார். வெல்டன் துருவ் ஜுரேல். வாழ்த்துக்கள்” என்று கூறினார். அதைப் பார்த்த ரசிகர்கள் சேவாக் மறைமுகமாக சர்பராஸ் கானை குத்திக்காட்டி பேசுவதாக சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர்.

- Advertisement -

ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஊடகங்கள் பெரிய அளவில் பேசின. மேலும் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்குள் நிறைய விமர்சனங்களும் நாடகங்களும் இருந்தன. எனவே சர்ஃபராஸை விட எந்த சத்தமுமின்றி அறிமுகமான துருவ் ஜுரேல் சிறப்பாக செயல்படுகிறார் என்று சேவாக் பாராட்டியதாக ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்தனர். ஆனால் அதை மறுத்த சேவாக் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: லெஃப்ட் ஹேண்ட் வார்னே மாதிரி.. எங்க டீமை சாய்ச்சுட்டாரு.. குல்தீப்புக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பாராட்டு

“யாரையும் இழிவுபடுத்தவில்லை. ஆனால் அனைவரையும் சமமாக மிகைப்படுத்த வேண்டும். சில வீரர்கள் நன்றாக பந்து வீசினர். சிலர் நன்றாக பேட்டிங் செய்தனர். ஆனால் அதற்கு அவர்கள் பாராட்டு பெறவில்லை. குறிப்பாக ஆகாஷ் தீப் இங்கே அசத்துகிறார். ஜெயஸ்வால் தொடர் முழுவதும் அசத்தி வருகிறார். சர்பராஸ் ராஜ்கோட்டில் அசத்தார். துருவ் தன்னுடைய அனைத்து வாய்ப்புகளிலும் அசத்தி வருகிறார். எனவே அனைவரையும் மிகைப்படுத்தி பாராட்டுங்கள்” என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement