லெஃப்ட் ஹேண்ட் வார்னே மாதிரி.. எங்க டீமை சாய்ச்சுட்டாரு.. குல்தீப்புக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பாராட்டு

Kuldeep yadav
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் 192 என்ற இலக்கை இந்தியா சேசிங் செய்து வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் போராடி 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 90, ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்கள் எடுத்தார். அதன் பின் 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாக வைத்திருந்தது.

- Advertisement -

லெப்ட் ஹேண்ட் வார்னே:
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அந்த அணி 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகப்படுத்தமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து சேசிங் செய்யும் இந்தியா 3வது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோஹித் சர்மா 24*, ஜெய்ஸ்வால் 16* ரன்களுடன் இருப்பதால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் ஜாக் கிராவ்லி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் உட்பட 4 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் பேட்டிங்கில் முக்கியமான 28 ரன்கள் அடித்து இந்தியா கம்பேக் கொடுப்பதற்கு முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். அதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.

- Advertisement -

மேலும் குல்தீப் எடுக்க வேண்டிய ஐந்து விக்கெட்டுகளை நான் எடுத்து விட்டேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடைய பந்து வீச்சை வெளிப்படையாக பாராட்டினார். இந்நிலையில் இப்போட்டியில் இடது கை ஷேன் வார்னே போல பந்து வீசி இங்கிலாந்தை குல்தீப் யாதவ் திணறிடித்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: சதத்தை பற்றி கவலைப்படல.. என் சல்யூட்டை அவருக்கு டெடிகேட் பண்றேன்.. துருவ் ஜுரேல் பேட்டி

“இங்கிலாந்தின் இன்னிங்ஸ் வேகமாக முடிந்து விடும் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் குல்தீப் அழகாக பந்து வீசுகிறார். அவருக்கு நான் சிறந்த பாராட்டை கொடுக்கிறேன். இன்று அவர் இடது கை ஷேன் வார்னே போல பந்து வீசினார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 4வது நாளில் இன்னும் 152 ரன்கள் எடுத்து இங்கிலாந்து தோற்கடித்து கோப்பையை ஆரம்பத்திலேயே கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement