சதத்தை பற்றி கவலைப்படல.. என் சல்யூட்டை அவருக்கு டெடிகேட் பண்றேன்.. துருவ் ஜுரேல் பேட்டி

Dhruv Jurel 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இந்தியா தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடி 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 90, ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து சுமாராக பேட்டிங் செய்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

வெற்றியே முக்கியம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 192 ரன்களை சேசிங் செய்யும் இந்தியா 3வது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளதால் கண்டிப்பாக வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். முன்னதாக கடந்த போட்டியில் அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் இப்போட்டியில் 177/7 என இந்தியா தடுமாறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து 307 ரன்கள் அடிக்க முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் 90 ரன்களில் ஆட்டமிழந்த அவர் 50 ரன்கள் அடித்த போது அதை 1999 கார்கில் போரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன்னுடைய தந்தைக்கு சல்யூட் செய்து கொண்டாடினார். இந்நிலையில் சதத்தை தவற விட்டதற்காக கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் ஜுரேல் தொடரை வெல்வதே முக்கியம் என கூறியுள்ளார். மேலும் அரை சதமடித்த போது தந்தைக்கு சல்யூட் செய்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய தந்தை கார்கில் போரில் பணியாற்றிய வீரர். எனவே என்னுடைய அரை சதத்தை அடித்த போது சல்யூட் செய்தது அவருக்கானது. இது என்னுடைய அறிமுகத் தொடர் என்பதால் அழுத்தம் உள்ளது. இருப்பினும் கடினமான சூழ்நிலையில் அணிக்கு என்ன தேவை என்பதை நான் நினைக்கிறேன். குல்தீப்பும் நானும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தொடர்ந்து பேசிக் கொண்டே விளையாடினோம்”

இதையும் படிங்க: துருவ் ஜுரேலின் அந்த ஒரு திறமையை பார்க்கும்போது அவர்தான் அடுத்த தோனியாக இருக்கப்போகிறார் – கவாஸ்கர் பாராட்டு

“ராஞ்சியில் சதத்தை தவற விட்டதற்காக நான் வருத்தப்படவில்லை. இத்தொடரின் கோப்பையை கைகளில் ஏந்துவதே என்னுடைய கனவாகும். என்னுடைய நாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்னுடைய கனவு” என்று கூறினார். அத்துடன் அடுத்த தோனியாக உருவாகும் வழியில் இருப்பதாக தம்மை சுனில் கவாஸ்கர் பாராட்டியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடமிருந்து இப்படி கேட்பதை நன்றாக இருக்கிறது. இந்திய அணியில் நல்ல சூழல் நிலவுகிறது” என்று கூறினார்.

Advertisement