IND vs WI : என்மீது நம்பிக்கை வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. ஆட்டநாயகன் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி

Jaiswal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

Jaiswal

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் அறிமுக வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 387 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 171 ரன்கள் அடித்து பல சாதனைகளையும் படைத்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்று விளையாடிய அனுபவம் குறித்து பேசிய ஆட்டநாயகன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில் : இந்த போட்டிக்காக நான் மிகச் சிறப்பாக தயாராகி இருந்தேன். இங்கு வந்து பயிற்சியையும் நாங்கள் சரியாக மேற்கொண்டோம். அதோடு அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடிடம் நிறைய ஆலோசனைகளை மேற்கொண்டேன்.

Yashasvi Jaiswal

இந்த போட்டியில் என் மீது நம்பிக்கை வைத்து என்னை விளையாட வைத்த அனைத்து தேர்வாளர்களுக்கும், அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்த இடத்திற்கு வருவதற்காக நிறைய உழைத்து இருக்கிறேன். இனியும் என்னுடைய உழைப்பை வெளிக்காட்டுவேன். எப்பொழுதுமே நான் என்னுடைய பயிற்சியிலும், ஒழுக்கத்திலும் கவனத்தை கொண்டுள்ளேன்.

- Advertisement -

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதோடு உணர்ச்சிகரமான ஒன்று. இது ஒரு ஆரம்பம்தான் இனி வரும் போட்டிகளில் எனது கவனத்தை செலுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பயணிக்க விரும்புகிறேன். எனது இந்த பயணத்தில் நிறைய பேர் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே எனது நன்றியை சொல்ல விரும்புகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : நாங்க பேட்டிங் பண்ணும் போதே அந்த முடிவோடு தான் பேட்டிங் பண்ணோம். வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேட்டி

இந்த போட்டியில் அனுபவ வீரர்களுடன் இணைந்து விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த போட்டியில் சீனியர் வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர்களது அருகில் இருந்து இன்னும் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement