IND vs WI : நாங்க பேட்டிங் பண்ணும் போதே அந்த முடிவோடு தான் பேட்டிங் பண்ணோம். வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேட்டி

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 421 ரன்கள் குவித்தது.

IND vs WI 1

- Advertisement -

இதன் காரணமாக 271 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 130 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

அதோடு இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாட்டுக்காக நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது. பந்துவீச்சில் நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் 150 ரன்களுக்கு சுருட்டியது எங்களின் வெற்றிக்கு பாதை வகுத்தது.

Ashwin

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதோடு ரன்கள் வருவதும் இங்கு எளிதானது கிடையாது. எனவே இந்த போட்டியில் நாங்கள் ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். அதன்படி முதல் இன்னிங்சில் நிறைய நேரம் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம். பிறகு மீண்டும் வந்து சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற்றுள்ளோம்.

- Advertisement -

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார். அவரிடம் திறமை இருக்கிறது மேலும் அதை அவர் களத்தில் வெளிப்படுத்த தயாராக இருக்கிறார் என்பதை நாம் கடந்த சில காலத்தில் பார்த்துள்ளோம். இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். எந்த ஒரு நிலையிலும் அவர் பிரஷராகாமல் அருமையாக இன்னிங்க்ஸை கட்டமைத்தார்.

இதையும் படிங்க : தவான் இல்ல, ஆசிய கேம்ஸ் தொடரில் ரசிகர்கள் எதிர்பாரா புதிய கேப்டன் – 3 தமிழக வீரர்களுக்கு இடம், அணி லிஸ்ட் இதோ

பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து நாம் சொல்வதற்கு அதிகமில்லை. அவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள். இது போன்ற ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது இருவருக்குமே தெளிவாக தெரியும். அந்த வகையில் அவர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடப்பட்டது.

Advertisement