RR vs KKR : செஞ்சுரி பத்தி யோசிக்கல. நான் யோசிச்சது எல்லாம் இது மட்டும் தான் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

Jaiswal-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Jaiswal

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே குவிக்க 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

ஏனெனில் இந்த போட்டியில் 47 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில் :

Jaiswal and Samson

நான் எப்பொழுதுமே களத்திற்கு செல்லும் போது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மனநிலையுடனே செல்வேன். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியின் போது நான் என்னை மிகச் சிறப்பாக தயார்படுத்திக் கொள்கிறேன் எனவே நிச்சயம் போட்டிகளின் போது அந்த பயிற்சிக்கான முடிவுகள் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போதும் இறுதிவரை களத்தில் நின்று வின்னிங் ஷாட்டை அடித்து போட்டியை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நான் சதத்தை தவறவிட்டது குறித்து எதையும் யோசிக்கவில்லை. நான் யோசித்தது எல்லாம் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த வகையில் போட்டியை சிறப்பாக பினிஷிங் செய்ததில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : IPL 2023 : தியாகமா கோபமா? காரணமின்றி ஜோஸ் பட்லரை தண்டித்த அம்பயர்கள் – ரசிகர்கள் குழப்பம், நடந்தது என்ன

அதோடு சஞ்சு சாம்சன் உள்ளே வந்தபோது ஜாஸ் பட்லர் ரன் அவுட் ஆனதை பற்றி எல்லாம் யோசிக்காதே, நீ உன்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்து என்று கூறினார். அதேபோன்று நாங்கள் இருவருமே இந்த போட்டியை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்றும் ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்று அதிரடியாக விளையாடி போட்டியை முடித்து கொடுத்தோம் என ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement