IPL 2023 : தியாகமா கோபமா? காரணமின்றி ஜோஸ் பட்லரை தண்டித்த அம்பயர்கள் – ரசிகர்கள் குழப்பம், நடந்தது என்ன

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 11ஆம் தேதியான நேற்று இரவு உலகப் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுமாராக செயல்பட்டு 20 ஓவர்களில் வெறும் 149/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 (42) ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 150 ரன்கள் துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் முரட்டுத்தனமாக அடித்த ஜெய்ஸ்வால் 6, 6, 4, 4, 2, 4 என வரலாற்றிலேயே அதிகபட்சமாக 26 ரன்களை விளாசி சாதனை படைத்தார். அவருடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தடுமாற்றமாக செயல்பட்டு 0 (3) ரன்களில் ரன் அவுட்டானாலும் மறுபுறம் கொல்கத்தா பவுலர்களை சூறையாடிய ஜெய்ஸ்வால் வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்தார். அவருடன் களமிறங்கி தனது பங்கிற்கு அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி சிக்ஸருடன் 48* (29) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தியாகத்துக்கு தண்டனை:
ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 98* (47) ரன்கள் விளாசி 13.1 ஓவரிலேயே ராஜஸ்தானை வெற்றி பெற வைத்து கொல்கத்தாவின் பிளே ஆஃப் சுற்று கனவை 95% உடைத்தார். அப்படி அட்டகாசமாக நடைபெற்ற அந்த போட்டியில் ஜெய்ஸ்வால் அதிரடியை துவங்கிய நிலையில் மறுபுறம் சற்று தடுமாறிய ஜோஸ் பட்லர் 2வது ஓவரின் 4வது பந்தில் சிங்கிள் எடுப்பதற்கேற்றார் போல அடித்தார். அதனால் உடனடியாக ஜெய்ஸ்வால் சிங்கிள் எடுக்க ஓடி வந்தார்.

ஆனாலும் அதை ஆண்ட்ரே ரசல் தடுத்து நிறுத்தியதை பார்த்த பட்லர் “வேண்டாம்” என்று சொல்வதற்குள் ஜெய்ஸ்வால் பாதி தூரம் ஓடி வந்து விட்டார். அதனால் ஏற்கனவே முதல் ஓவரில் 26 ரன்கள் அடித்து அட்டகாசமான பார்மில் இருக்கும் அவர் தொடர்ந்து விளையாடட்டும் என்ற நோக்கத்தில் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறிய பட்லர் மனதை விட்டு கிட்டத்தட்ட தனது விக்கெட்டை தியாகம் செய்து போல மெதுவாக ஓடினார். அந்த அரை மனதுடன் வருவதற்குள் பந்தை எடுத்த ரசல் எதிர்பார்த்தது போலவே ரன் அவுட் செய்தார். அதனால் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்ற போதிலும் பட்லரின் தியாகத்தை வீணடிக்காத வகையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் ஜெயஸ்வால் அதிரடியாக விளையாடுவதற்காக ஜாம்பவான் பட்லர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்ததாக போட்டியின் முடிவில் கேப்டன் சஞ்சு சாம்சன் கலகலப்பாக தெரிவித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் தாம் தான் தவறாக அழைத்ததால் பட்லர் அவுட்டாகி விட்டதாக ஜெய்ஸ்வால் மன்னிப்பு கேட்காத குறையாக பேசினார். ஆனால் அவர்கள் அனைவரையும் தாண்டி போட்டி முடிந்ததும் ஜெய்ஸ்வாலை கட்டிப்பிடித்த பட்லர் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் 2.2 விதிமுறையின் லெவல் 1 குற்றத்தை செய்ததால் ஜோஸ் பட்லருக்கு இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதை பட்லர் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படாது என்று தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இருப்பினும் விக்கெட்டை தியாகம் செய்து ரன் அவுட்டான பின் பெவிலியின் திரும்பிய அவர் உள்ளே நுழையும் போது பவுண்டரி எல்லையை பேட்டால் அடித்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க:KKR vs RR : ஜெய்ஸ்வாலுக்கு எதிரா நான் முதல் ஓவர் வீச இதுதான் காரணம். தோல்விக்கு பிறகு – நிதீஷ் ராணா வெளிப்படை

அப்படி மைதானத்தில் இருந்த பொருளை சேதப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் உண்மையான காரணத்தை ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்காததால் இதற்கெல்லாமா அதுவும் காரணத்தை சொல்லாமல் தண்டனை கொடுப்பீங்க என்று ரசிகர்கள் குழப்பதுடன் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement