KKR vs RR : ஜெய்ஸ்வாலுக்கு எதிரா நான் முதல் ஓவர் வீச இதுதான் காரணம். தோல்விக்கு பிறகு – நிதீஷ் ராணா வெளிப்படை

Rana-and-Jaiswal
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அனியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Jaiswal

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதல் ஓவரிலேயே 26 ரன்கள் குவித்து அசத்தியது. அதிலும் குறிப்பாக நிதீஷ் ராணா வீசிய முதல் ஓவரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என 26 ரன்கள் அடித்து அதிரடியாக ஆட்டத்தை துவங்கினார்.

Jaiswal 1

பின்னர் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினாலும் இறுதிவரை அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்களும் குவிக்க ராஜஸ்தான் அணியானது 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா கூறுகையில் : ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.

இதையும் படிங்க : RR vs KKR : அவரமாதிரி ஒரு லெஜன்ட் எங்க டீம்ல இருக்குறது எங்களுக்கு கெடச்ச அதிர்ஷ்டம் – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன். மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது என நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement