RR vs KKR : அவரமாதிரி ஒரு லெஜன்ட் எங்க டீம்ல இருக்குறது எங்களுக்கு கெடச்ச அதிர்ஷ்டம் – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

Sanju-Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

KKR vs RR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் 57 ரன்களையும், நிதீஷ் ராணா 22 ரன்களையும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட வெறும் 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக ஜெய்ஸ்வால் 98 ரன்களையும், சஞ்சு சாம்சன் 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Chahal

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த போட்டியில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. பந்தை பார்த்து பேட்டை வைத்தால் மட்டுமே போதும். எதிர்புறத்தில் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

அவர் பவர்பிளே ஓவர்களில் விளையாடிய விதத்தை பார்த்து நிச்சயம் பவுலர்களுக்கே குழப்பம் ஏற்பட்டிருக்கும். அந்த அளவிற்கு அவர் அதிரடியாக விளையாடினார். என்னை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹலுக்கு லெஜன்ட் பட்டம் கொடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது. அவரைப் போன்ற ஒரு வீரர் எங்கள் அணியில் இருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம்.

இதையும் படிங்க : வீடியோ : தோனி போல பெருந்தன்மை காட்டிய சஞ்சு சாம்சன் ஆனா கேவலமான திட்டம் போட்ட இளம் வீரரை – விளாசும் ரசிகர்கள்

நான் எப்பொழுதுமே அவரிடம் நிறைய பேசுவதில்லை. எப்போது அவரிடம் பந்து கொடுத்தாலும் அவருக்கு என்ன செய்வது என்று தெளிவாக தெரியும். அந்த வகையில் டெத் ஓவரில் கூட மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார் ஒரு கேப்டனாக அவரைப் போன்ற வீரரை கையாள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement