“அதை சொல்ல வார்த்தைகளே இல்ல” தோனியை முதல் முறையாக நேரில் பார்த்த அனுபவத்தை – பகிர்ந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான மகேந்திர சிங் தோனி பல இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார். அவரை நேரில் சந்திப்பதற்காகவே பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விரும்பி விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் முறையாக தோனியை நேரில் சந்தித்தார்.

Yashasvi Jaiswal

- Advertisement -

அப்படி நடைபெற்ற அந்த சந்திப்பின்போது தோனியிடம் ஒரு ரசிகராக ஜெய்ஸ்வால் மகிழ்ச்சி அடைந்ததை பார்க்க முடிந்தது. சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனியை இருக்கை கூப்பி ஜெய்ஸ்வால் வணங்கினார். மிகப்பெரிய ஒரு ஆளுமையை நேரில் சந்திக்கும் போது இளம் வீரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது அவரது அந்த செயலின் மூலம் தெரிந்தது.

இந்நிலையில் தோனியை முதல் முறை சந்தித்தபோது ஜெயஸ்வால் என்ன நினைத்தார்? என்ன பேசினார்? என்பது குறித்து தற்போது இந்திய அணியின் சக வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பி.சி.சி.ஐ-க்காக எடுத்த பேட்டி ஒன்றில் அவர் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Jaiswal

நான் தோனி சாரை முதன் முதலில் பார்த்தபோது வார்த்தைகள் தொலைந்து போய் பேச முடியாமல் நின்றேன். அதோடு அவரைப் பார்த்ததும் நமஸ்தே சார் என்று இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினேன். அவரைப் பார்ப்பது ஒரு வரம் போல இருந்தது.

- Advertisement -

நான் முதல்முறை அவரை நேரில் சந்தித்ததை விவரிக்க என்னிடம் இன்னும் வார்த்தைகள் இல்லை என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் உள்ளூர் போட்டிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த சூரியகுமார் யாதவ் தயார் – 360 டிகிரியில் சிக்ஸர்களை பறக்க விடும் தமிழக வீரர் (வீடியோவ பாருங்க புரியும்)

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறயிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக அவர் இந்த பேட்டியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement