தமிழகத்தின் சூரியகுமார் பாத்துருக்கீங்களா – 360 டிகிரியில் சிக்ஸர்களை பறக்க விடும் தமிழக வீரர் (வீடியோவ பாருங்க புரியும்)

- Advertisement -

தமிழகத்தில் பொதிந்துள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் டி20 தொடரின் 2023 சீசனில் லீக் சுற்றில் ஆரம்பத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமை தாங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து அசத்தியது. இருப்பினும் குவாலிபயர் 1 போட்டியில் கோவையிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற நெல்லைக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் கடைசி பந்து வரை போராடி தோல்வியை சந்தித்து வெளியேறியது.

ஆனாலும் அந்த அணிக்காக விளையாடிய சரத்குமார் இந்த சீசனின் ஒரு கண்டுபிடிப்பாக கிடைத்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக அழுத்தமான மிடில் ஆர்டரில் 7வது இடத்தில் அவர் திருச்சிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 1 பவுண்டரியுடன் 5 (5) ரன்கள் எடுத்த நிலையில் சேப்பாக்கத்துக்கு எதிரான 2வது போட்டியில் 3 பவுண்டரியுடன் 25 (21) ரன்கள் எடுத்து அசத்தினார். அதே போல கோவைக்கு எதிரான மற்றொரு போட்டியில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (15) ரன்கள் எடுத்த அவர் அடுத்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறவில்லை.

- Advertisement -

தமிழகத்தின் சூர்யகுமார்:
இருப்பினும் மீண்டும் கோவைக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் 194 ரன்களை துரத்தும் போது 8வது இடத்தில் களமிறங்கி சரமாரியாக அடித்து நொறுக்கிய அடித்த அவர் 1 பவுண்டரி 8 சிக்ஸருடன் சரவெடியாக 62 (26) ரன்களை 238.46 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி போராடி ஆட்டமிழந்தார். அப்படி மொத்தமாக இந்த சீசனில் 5 இன்னிங்ஸில் 137 ரன்களை குவித்த அவர் திண்டுக்கல் அணியின் சிறந்த லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வெற்றிக்கு போராடினார்.

அதை விட தற்போதைய நவீன கிரிக்கெட்டுக்கு தேவையான கற்பனைக்கு அப்பாற்பட்ட வித்தியாசமான ஷாட்களை அடிக்கும் பேட்டிங் ஸ்டைல் தான் அவர் அடித்த ரன்களை விட மிகவும் விலைமதிப்பற்றதாக இருந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் சேப்பாக்கத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் ராக்கி வீசிய 12வது ஓவரின் 2வது பந்தை முதலில் கவர் திசை நோக்கி அடிப்பதற்காக அவர் லேசாக பின்னோக்கி நகர்ந்தார். ஆனால் பவுலர் பந்தை விடுவிக்கும் கோணத்தை பார்த்து அதற்கேற்றார் போல் திட்டத்தை மாற்றிய அவர் ஆஃப் சைட் நோக்கி நகர்ந்து கிட்டத்தட்ட பிட்ச்சுக்கு வெளியே சென்று முட்டி போட்டு கீழே விழுந்து கொண்டே அடித்த அபாரமான பவுண்டரியை மறக்கவே முடியாது.

- Advertisement -

சொல்லப்போனால் அவர் நகர்கிறார் என்று தெரிந்து பவுலரும் பந்தை முழுவதுமாக தன்னுடைய திட்டத்தை மாற்றி ஒய்ட் போல வீசினார். இருப்பினும் அதற்காக அசராமல் சரத்குமார் கிட்டத்தட்ட பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்து கொண்டே அற்புதமான பவுண்டரியை அடித்தது அவருடைய தன்னம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது. அது போக கோவைக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான குவாலிபயர் 1 போட்டியில் கடைசி நேரத்தில் கட்டுக்கடங்காமல் அதிரடி காட்டிய அவர் தரமணி கண்ணன் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் திடீரென இடது கை பேட்ஸ்மேனாக மாறி கச்சிதமான டைமிங் கொடுத்து முரட்டுத்தனமான சிக்சரை அடித்த மெகா சிக்ஸரையும் இத்தொடரை பார்த்தவர்களால் மறக்க முடியாது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் போல திடீரென திருப்பி பவுலருக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் அவர் அடித்த 87 மீட்டர் சிக்கர் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி அற்புதமான திறமை இருந்தும் ஆரம்ப காலங்களில் வாய்ப்பு தேடியே 32 வயதை கடந்து விட்ட அவர் தற்போது தான் டிஎன்பிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் தன்னுடைய திறமைகளை அரங்கேற்றி வருகிறார்.

இதையும் படிங்க:IND vs WI : முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓப்பனர் இவர்தான். 3 ஆவது இடத்தில் ஆடப்போவது இவர்தான் – ரோஹித் சர்மா அறிவிப்பு

அந்த வகையில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத வித்யாசமான ஷாட்களை விளாசி எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யதாவை போல சரத்குமார் அசத்த துவங்கியுள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement