TNPL 2023 : சாய் சுதர்சனையே மிஞ்சி சாதனை படைத்த மற்றொரு தமிழக வீரர் – அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள் லிஸ்ட் இதோ

- Advertisement -

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த டிஎன்பிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் நெல்லையை அதன் சொந்த ஊரில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கோவை 2வது முறையாக கோப்பையை வென்று நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஷாருக்கான் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட கோவை புள்ளி பட்டியல் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று குவாலிபயர் 1 போட்டியில் திண்டுக்கல்லை வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்கு சென்றது.

மறுபுறம் புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த நெல்லை எலிமினேட்டரில் மதுரையை வீட்டுக்கு அனுப்பி வைத்து குவாலிபயர் 2 போட்டியில் வலுவான திண்டுக்கலை தோற்கடித்து ஃபைனலுக்கு வந்தது. அந்த நிலையில் மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை 205/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுரேஷ்குமார் 57 (33) முகிலேஷ் 51* (40) அத்திக் உர் ரஹ்மான் 50 (21) என முக்கிய வீரர்கள் அதிரடியான ரன்களை எடுக்க நெல்லை சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ், சந்திப் வாரியர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அசத்தல் அஜிதேஷ்:
ஆனால் அதை துரத்திய நெல்லை சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 15 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 27 (14) ரன்கள் எடுக்க கோவை சார்பில் அதிகபட்சமாக சுப்பிரமணியன் 4 விக்கெட்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இளம் வீரர்களை அடையாளப்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த டிஎன்பிஎல் தொடரில் இந்த வருடம் சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக விளையாடி ஆரம்பம் முதலே பெரிய ரன்களை குவித்து கோவை அணியின் வெற்றிகளில் பங்காற்றினார்.

குறிப்பாக ஐபிஎல் 2023 தொடரில் தோனி தலைமையிலான சென்னைக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் அதிரடியாக 96 ரன்கள் விளாசி வெறும் 8 போட்டிகளிலேயே 362 ரன்கள் குவித்த அவர் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுகளை பெற்று அதே வேகத்தில் இந்த தொடரிலும் முதல் 6 போட்டியிலேயே 371 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்திருந்தார்.

- Advertisement -

இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பையில் தெற்கு மண்டல அணிக்காக விளையாடத் தேர்வான அவர் விரைவில் இலங்கையில் நடைபெறும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காகவும் தேர்வாகி அசத்தியுள்ளார். அதன் காரணமாக இத்தொடரில் பாதியிலேயே அவர் வெளியேறிய நிலையில் மறுபுறம் ஃபைனல் வரை வந்த நெல்லை அணிக்காக ஆரம்பம் முதல் அசத்திய மற்றொரு இளம் வீரர் அஜிதேஷ் இதே கோவைக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் சதம்டித்து 112 ரன்கள் விளாசி அசத்தினார்.

அதன் வாயிலாக இந்த தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராகவும் சாதனை படைத்த அவர் மொத்தம் 10 போட்டிகளில் 385 ரன்களை 64.17 என்ற சராசரியில் குவித்து நெல்லை ஃபைனல் வரை வருவதற்கு முக்கிய பங்காற்றி அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் கடைசியாக முதலிடம் பிடித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:டெக்சாஸ் அணியிலிருந்து வெளியேறிய ராயுடுவுக்கு பதிலாக மற்றொரு சி.எஸ்.கே வீரர் சேர்ப்பு – செம செலக்சன் தான்

அதன் வாயிலாக சாய் சுதர்சனையே வெறும் 15 ரன்களில் மிஞ்சிய அவர் டிஎன்பிஎல் 2023 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து அதற்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி மட்டுமின்றி தொடர் நாயகன் விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார். ஆனாலும் கூட அவரை விட குறைந்த போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் சாய் சுதர்சன் அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்த டிஎன்பிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியல் இதோ:

1. அஜிதேஷ் குருசாமி (நெல்லை) : 385 (10 போட்டிகள் – 163.13 ஸ்ட்ரைக் ரேட்)
2. சாய் சுதர்சன் (கோவை) : 371 (6 போட்டிகள் – 172.55 ஸ்ட்ரைக் ரேட்)
3. சிவம் சிங் (நெல்லை) : 356 (9 போட்டிகள் –
4. பாபா அபாரஜித் (சேப்பாக்) : 283 (7 போட்டிகள் – 142.92 ஸ்ட்ரைக் ரேட்)
5. சுரேஷ்குமார் (கோவை) : 280 (9 போட்டிகள் – 161.84 ஸ்ட்ரைக் ரேட்)

Advertisement