டெக்சாஸ் அணியிலிருந்து வெளியேறிய ராயுடுவுக்கு பதிலாக மற்றொரு சி.எஸ்.கே வீரர் சேர்ப்பு – செம செலக்சன் தான்

Ambati-Rayudu
- Advertisement -

இந்தியாவில் கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் “மேஜர் லீக் டி20 கிரிக்கெட்” என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

TSK

- Advertisement -

இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த ஆறு அணிகளில் ஒரு அணியான “டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்” என்கிற அணியை சிஎஸ்கே குழுமம் விலைக்கு வாங்கி அதன் உரிமையாளராக செயல்படுகிறது. டெக்சாஸ் நகரை தலைமையாகக் கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் சமீபத்தில் இணைந்திருந்தார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த அவர் வெளிநாடுகளில் உள்ள டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடும் விதமாக இந்த அமெரிக்க டி20 லீக்கில் இணைந்தார்.

Tahir

ஆனால் தற்போது தனிப்பட்ட வேலைகள் காரணமாக இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இந்நிலையில் ஜூலை 14-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த டி20 லீக் தொடரிலிருந்து அவர் விலகியதால் அவருக்கு மாற்றாக எந்த வீரரை தேர்வு செய்யலாம் என சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தங்களது தேடலை தொடங்கியது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அணியின் முன்னாள் வீரரான இம்ரான் தாஹீரை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்ஸாஸ் அணியில் இணைத்துள்ளது.

இதையும் படிங்க : எத்தனை சாதனை படைச்சாலும் அதுக்கு ஈடாகுமா? கேரியரின் அந்த உச்சத்தை என்னால சாதிக்க முடியாம போச்சே – அஸ்வின் ஆதங்க பேட்டி

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் இதுவரை 378 டி20 போட்டிகளில் விளையாடி 469 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் இரண்டு முறை கோப்பை வென்ற சி.எஸ்.கே அணியில் இருந்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement