எத்தனை சாதனை படைச்சாலும் அதுக்கு ஈடாகுமா? கேரியரின் அந்த உச்சத்தை என்னால சாதிக்க முடியாம போச்சே – அஸ்வின் ஆதங்க பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கியுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை நங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனாலும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 20, தக்நரேன் சந்தர்பால் 12, ப்ளாக்வுட் 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளும் அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 40* ரன்களும் ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 30* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

அஸ்வின் ஆதங்கம்:
முன்னதாக இப்போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் சாதனையும் தகர்த்த அஷ்வின் தன்னை உலகின் நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

Ashwin

குறிப்பாக ஏற்கனவே உலகில் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த பவுலராக உலக சாதனை படைத்துள்ள அவர் ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் ஃபைனலில் தேர்வு செய்யப்படாதது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் ஃபைனலில் தேர்வாகியிருந்தால் சதமடித்து வெற்றியைப்பறித்த டிராவிஸ் ஹெட்டுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றியில் அஸ்வின் பங்காற்று இருப்பார் என்று சச்சின் முதல் கவாஸ்கர் வரை ஏராளமான ஜாம்பவான்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி எத்தனை சாதனை படைத்தாலும் ஃபைனலில் வாய்ப்பு பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றிருந்தால் அதுவே தம்முடைய கேரியரின் உச்சகட்ட சாதனையாக இருக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் எனக்காக மற்றொருவர் நீக்கப்பட்டிருந்தால் என்ன நினைத்திருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள முடிவதாக தெரிவிக்கும் அவர் முடிந்ததைப் பற்றி பேசாமல் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இது பற்றி இப்போட்டியின் முதல் நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

Ashwin

“டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனலில் வெல்வதே மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவேளை நாங்கள் அதை வென்றிருந்தால் அதுவே என்னுடைய கேரியரின் உச்சமாக இருந்திருக்கும். அந்த போட்டியில் நானும் வெற்றியில் நல்ல பங்காற்றி இருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த போட்டியின் முதல் நாளிலேயே வெற்றி எங்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. அத்துடன் இந்தியாவுக்காக விளையாடும் என்னையும் மற்றொருவரையும் நீக்குவதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது”

இதையும் படிங்க:TNPL 2023 : இவர் தான் ரியல் 3டி பிளேயர், தல தோனி போலவே கேப்டனாக அசத்திய ஷாருக்கான் – யாருமே எதிர்பார்க்காத மாஸ் சாதனை

“எனவே தங்க வீரர்களுக்கு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டுக்கும் அனைத்தையும் புரிந்து கொண்டு களத்தில் என்னுடைய சிறந்த முயற்சிகளையும் ஆதரவையும் கொடுக்க விரும்புகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல எத்தனை சாதனைகள் படைத்தாலும் நாட்டுக்காக உலகக் கோப்பை வெல்வதே ஒரு வீரரின் உச்சகட்ட சாதனையாக இருக்கும் எனலாம். அந்த வகையில் ஏற்கனவே 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன் டிராபியை வென்ற அஸ்வின் 36 வயதை கடந்து விட்டதால் ஜாம்பவானாக போற்றப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2025இல் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவது சந்தேகம் என்றே சொல்லலாம்.

Advertisement