மீண்டும் ஃபார்முக்கு திரும்ப உதவிய அந்த 2 சீனியர்களுக்கு நன்றி.. மும்பையை நொறுக்கிய ஜெய்ஸ்வால் பேட்டி

jaiswal 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. ஜெய்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் போராடி 179/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 180 ரன்களை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் முறையாக இப்போட்டியில் ஃபார்முக்கு திரும்பி மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கி சதமடித்து 9 பவுண்டரி 7 சிக்ஸருடன் 104* (60) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார்.

- Advertisement -

சீனியர்களுக்கு நன்றி:
அவருடன் சஞ்சு சாம்சன் 38* ரன்கள் எடுத்ததால் 18/4 ஓவரிலேயே இலக்கை எட்டிய ராஜஸ்தான் எளிதாக வென்றது. இதையும் சேர்த்து 8 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஜெய்ஸ்வால் சதமடித்து ஃபார்முக்கு திரும்பியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் சென்ற வருடம் இதே ஐபிஎல் தொடரில் 625 ரன்கள் குவித்ததால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக விளையாடி தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். குறிப்பாக சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 712 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி பெற உதவிய அவர் இந்த ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் அசத்தவில்லை.

- Advertisement -

ஆனால் இப்போட்டியில் ஐபிஎல் தொடரில் 22 வயதில் 2 சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்த அவர் 2024 டி20 உலகக் கோப்பை முன் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில் சுமாராக விளையாடியும் தமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன், பயிற்சியாளர் குமார் சங்கக்காராவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெயஸ்வால் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அதுக்கு பெரிய இதயம் வேணும்.. யாருமே என்னை ஏலத்தில் வாங்கல.. ஆட்டநாயகன் சந்தீப் சர்மா பேட்டி

“இன்று ஆரம்பம் முதலே நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பந்தை சரியாக பார்த்து என்னுடைய ஷாட்டுகளை அடிப்பதில் உறுதியாக இருந்தேன். இதுவரை என்ன செய்தேனோ அதை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். அதை தவிர்த்து என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. கடினமான நேரத்தில் என்னை வழி நடத்திய விதத்திற்காக என்னுடைய சீனியர்களுக்கு உண்மையாக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக சங்கா சார், சஞ்சு பாய் ஆகியோர் எனக்கு வாய்ப்புகள் கொடுத்தனர். அதை பயன்படுத்தி வலைப்பயிற்சியிலும் களத்திலும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சித்தேன்” என்று கூறினார்.

Advertisement