அதுக்கு பெரிய இதயம் வேணும்.. யாருமே என்னை ஏலத்தில் வாங்கல.. ஆட்டநாயகன் சந்தீப் சர்மா பேட்டி

Sandeep Sharma
- Advertisement -

அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. ஜெய்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 179/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 180 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு இந்த சீசனில் முதல் முறையாக ஃபார்முக்கு திரும்பி அடித்து நொறுக்கிய ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 104* (60) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ஜோஸ் பட்லர் 35, கேப்டன் சஞ்சு சாம்சன் 38* ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே எளிதாக ராஜஸ்தான் வென்றது.

- Advertisement -

ஆதங்கத்துடன் ஆட்டநாயகன்:
இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சந்திப் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக டெத் ஓவர்களில் மிகவும் துல்லியமாக பந்து வீசிய அவர் மும்பையை 200 ரன்கள் தொடவிடாமல் செய்து ராஜஸ்தான் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் டெத் ஓவர்களில் பந்து வீசுவதற்கு திறமையை விட மன தைரியம் தான் வேண்டும் என்று சந்திப் சர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏலத்தில் யாருமே தம்மை வாங்கவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கும் அவர் இப்போது கூட காயமடைந்து வீரருக்கு மாற்று வீரராக ராஜஸ்தான் அணியில் விளையாடுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேற்று தான் ஃபிட்டானேன். ஃபிட்டான பின் விளையாடிய முதல் போட்டி நல்ல உணர்வை கொடுக்கிறது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. எனவே தொடர்ந்து வேரியஷன்களை மாற்றி கட்டர்களை வீசுவோம் என்பதே என்னுடைய திட்டமாகும்”

- Advertisement -

இதையும் படிங்க: 104 ரன்ஸ்.. ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால் 22 வயதில் மாஸ் சாதனை.. 12வது வருடமாக மும்பைக்கு நேர்ந்த சோகம்

“கடைசிக்கட்ட ஓவர்களில் நீங்கள் பந்து வீசுகிறீர்கள் என்றால் உங்களுக்கு பெரிய இதயம் வேண்டும். ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் அந்த நேரத்தில் அழுத்தத்தை சந்தித்ததை பார்த்துள்ளேன். எனவே அங்கே அசத்துவதற்கு நீங்கள் பெரிய இதயத்துடன் திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன் நான் விலை போகவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இப்போதும் நான் மாற்று வீரராக வந்துள்ளேன். எனவே ஒவ்வொரு போட்டியையும் போனஸ் போல மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement